ARTICLE AD BOX
வேலைக்கு சேர கிரெடிட் கார்டு கட்டாயமா?. ரெட்டிட் தளத்தில் வைரலாகும் பதிவால் அதிர்ச்சி!.
டேட்டா எண்ட்ரி வேலைக்கு விண்ணப்பித்தவரிடம், நேர்காணலுக்கு வரும்போது கிரெடிட் கார்டு கட்டாயம் கொண்டு வரவேண்டும் என்று நிறுவனம் கூறியது தொடர்பாக ரெட்டிட் தளத்தில் பதிவு ஒன்று வைரலாகி வருகிறது.
வேலையின்றி இருக்கும் நபர் ஒருவர் டேட்டா எண்ட்ரி கிளர்க் வேலை கோரி, Reddit தளத்தில் பகிர்ந்துள்ளார். இதையடுத்து, அவரது மெயிலுக்கு அந்த நிறுவனம் சார்பில் வேலைப்பற்றியும் பதவிகளின் விவரங்கள் குறித்தும் அனுப்பப்பட்டது. அதில், "உங்கள் விண்ணப்பத்திற்கு நன்றி. எங்கள் நிறுவனத்தின் விதிமுறைகள் குறித்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும். தொலைபேசிகளுக்கு பதிலளிப்பது, மெயில்களை சரிபார்ப்பது, அலுவலகப் பொருட்களை நிர்வகித்தல் மற்றும் மைக்ரோசாஃப்ட் ஆபிஸ் பற்றிய அடிப்படை அறிவு பெற்றிருக்க வேண்டும் என்பது உள்ளிட்டவைகள் பட்டியலிடப்பட்டிருந்தது.

மேலும் அந்த நிறுவனம் பட்டியலிட்டிருந்த குறிப்பிட்ட கோரிக்கை ஒன்று விண்ணப்பித்தவரின் கவனத்தை ஈர்த்தது. அதாவது, நேர்காணல் நடைபெறுவதற்கு முன்பாக தங்கள் கடவுச்சீட்டு விவரங்களை வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அதாவது, நேர்க்காணலுக்கு வரும் அனைத்து ஊழியர்களும் கிரெடிட் கார்டு வைத்திருக்க வேண்டும், வணிகச் செலவுகளுக்காக நிறுவனத்தின் கிரெடிட் கார்டுகளை நீங்கள் அணுக முடியும் என்பதால்தான் இதை கேட்கிறோம், 48 மணிநேரத்திற்குள் கிரெடிட் கார்டு விண்ணப்பித்து விண்ணப்பத்தை பிரிண்ட் எடுத்து வரவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாகவே உண்மையான வேலை வாய்ப்புகளில் இதுபோன்ற கோரிக்கைகள் கேட்கப்படாது என்பதை அறிந்த அந்த நபர், இந்த மெயில் ஒரு மோசடியாக இருக்கலாம் என்பதை உணர்ந்தார்.

இதையடுத்து, இதுதொடர்பான பதிவுகளை அந்த நபர் டெட்டிட் தளத்தில் பதிவிட்டார். இதையடுத்து இந்தப் பதிவு விரைவாக பார்வையாளர்களிடையே கவனத்தைப் பெற்று, பயனர்களிடையே விவாதத்தை தூண்டியது. மேலும் இதுகுறித்து பயனர்கள் இது ஒரு மோசடியாக இருக்கலாம் என்று பதிவிட்டனர். பயனர் ஒருவர் இது உலகின் மிகப்பெரிய மோசடி. இதுபோன்ற பல மோசடிகளுக்கு பலர் சிக்கிக்கொள்கின்றனர். எந்த நிறுவனமும் வேலைக்காக விண்ணப்பிப்பவரிடம் கிரெடிட் கார்டை கேட்கமாட்டார்கள். கிரெடிட் கார்டு பணம் சார்ந்த ஒரு விஷயமாக இருக்கலாம், அதற்காக கிரெடிட் கார்டு தகவலை வழங்க வேண்டிய அவசியமில்லை. இது ஒரு மோசடி என்பதை உணர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்திய உங்களுக்கு நன்றி என்றும் பலர் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இதனால், பணம் மற்றும் தனிப்பட்ட தகவல்கள் திருடப்படும் அபாயம் உள்ளது.
இதுபோன்ற மோசடிகளில் மக்கள் சிக்கி கொள்ளாமல் இருக்க மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். எனவே, வேலையளிக்கும் நிறுவனம் உண்மையானதாக இருக்கிறதா எனத் தெரிந்து கொள்ளுங்கள். நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று, நிறுவனத்தின் உண்மை தன்மையை ஆராயவேண்டும். மேலும் அதை பற்றி பகிரப்பட்ட கருத்துக்களைப் பார்த்துக்கொள்ளுங்கள்.