வேலை நேரம் முடிஞ்ச பிறகு பாஸ் போன் பண்ணா கேஸ் போடலாம் தெரியுமா?

15 hours ago
ARTICLE AD BOX
  செய்திகள்

வேலை நேரம் முடிஞ்ச பிறகு பாஸ் போன் பண்ணா கேஸ் போடலாம் தெரியுமா?

News

இந்தியாவில் பெருநிறுவன முதலாளிகள் அனைவரும் வாரத்தில் 70 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்ய வேண்டும், ஞாயிற்றுக்கிழமைகளில் கூட வேலை செய்ய வேண்டும் என ஊழியர்களை அறிவுறுத்தி வரக்கூடிய இந்த நிலையில் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் வொர்க் லைஃப் பேலன்ஸ் (work life balance) மிகச் சிறப்பான முறையில் பின்பற்றப்படுவது தெரிய வந்துள்ளது.

குளோபல் எஜுகேஷன் அண்ட் கேரியர்ஸ் ஃபோரம் (Global education and careers forum ) என்ற நிறுவனம் இந்திய மாணவர்களுக்கான கல்வி ஆலோசனை நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இந்தியாவை சேர்ந்தவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று கல்வி பயில தேவையான ஆலோசனைகளை வழங்குகிறது. இதன் செயலாளராக இருப்பவர் லட்சுமி நாராயணன். இவர் எஜுகேஷன் மேட்டர்ஸ் (education matters) என்ற பெயரில் அமைப்பை நடத்தி அதன் மூலம் மாணவர்களுக்கான ஆலோசனைகளை வழங்குகிறார்.

வேலை நேரம் முடிஞ்ச பிறகு பாஸ் போன் பண்ணா கேஸ் போடலாம் தெரியுமா?

இந்த துறையில் 26 ஆண்டு காலம் அனுபவம் கொண்டவர். இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட தளங்கள் வாயிலாக வெளிநாடுகளில் சென்று கல்வி பயில்வது, வேலை செய்வது உள்ளிட்டவற்றுக்கு என்னென்ன செய்ய வேண்டும் என கூறி வருகிறது. அந்த வகையில் அண்மையில் இவர் அளித்த பேட்டி ஒன்றில் ஆஸ்திரேலியாவில் வொர்க் லைஃப் பேலன்ஸ் எப்படி ஒழுக்கமாக பின்பற்றப்படுகிறது என்பதை விவரித்துள்ளார்.

காலை 9 மணி முதல் 5 மணி வரை வேலை நேரம் என்றால் 9 மணிக்கு முன்னரோ அல்லது 5 மணிக்கு பின்னரோ முதலாளி தொழிலாளியிடம் வேலை பற்றி பேசவோ அல்லது ஒரு எஸ்எம்எஸ் கூட அனுப்பவோ கூடாது என கூறுகிறார். அதே வேலை நேரம் முடிந்து கிளம்பும் போது ஊழியர்கள் முதலாளியிடம் கூறி விட்டு செல்ல வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது என கூறியுள்ளார்.

வேலை நேரம் முடிந்த பின்னர் முதலாளியோ அல்லது நிறுவனமோ ஊழியரிடம் வேலையை பற்றி பேசினால் அவர் மீது வழக்குப்பதிவு செய்யும் வகையில் ஊழியர்களுக்கு சாதகமாகவே கொள்கைகள் வகுக்கப்பட்டுள்ளன என கூறுகிறார்.

ஆஸ்திரேலியா மட்டுமல்ல பல்வேறு நாடுகளிலும் வாரத்திற்கு குறிப்பிட்ட நாட்கள் மட்டும் வேலை செய்ய வேண்டும் மீத முள்ள நேரத்தை குடும்பத்திற்காகவும் சொந்த வாழ்க்கைக்காகவும் செலவிட அறிவுறுத்தப்படுகின்றனர். ஆனால் இந்தியாவிலோ இன்போசிஸ் நாராயணமூர்த்தி வாரத்திற்கு 80 மணி நேரத்திற்கு மேல் இளைஞர்கள் பணியாற்ற வேண்டும் என கூறுகிறார். எல்&டி தலைவர் சுப்பிரமணியனோ ஞாயிற்றுக்கிழமைகளில் கூட ஊழியர்கள் வேலை செய்ய வேண்டும் என கூறுகிறார்.

இந்திய பெரு முதலாளிகள் ஊழியர்களின் தனிப்பட்ட வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை , இந்தியாவில் உழைப்பு சுரண்டலுக்கு எதிராக சட்டம் இருந்தாலும் அதனை நிறுவனங்கள் பின்பற்றுவதில்லை என காரணங்களை அடுக்கி கொண்டே போகலாம். பல்வேறு நாடுகளில் வொர்க் லைஃப் பேலன்ஸை கருத்தில் கொண்டு வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை என்ற புதிய பாணியை அமல்படுத்தியுள்ளன.

Read Entire Article