வெள்ளை அறிக்கை வெளியிட ஏன் தயக்கம்? தமிழக அரசுக்கு அண்ணாமலை கேள்வி!

6 hours ago
ARTICLE AD BOX

தமிழக பள்ளிக்கல்வித் துறையில் நிதி ஒதுக்கீடு குறித்து வெள்ளை அறிக்கையை வெளியிடுமாறு தமிழக அரசை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்ததாவது, தமிழகம் முழுவதும் பள்ளிக் கட்டிடங்கள் பாழடைந்த நிலையில் இருப்பதும், பல பள்ளிகளில், மேற்கூரைகள் இடிந்து விழுவதும், வகுப்பறைகள் இல்லாமல் மரத்தடியில் வகுப்புகள் நடப்பதும் நாள்தோறும் செய்திகளாக வெளிவருகின்றன. நிலைமை இப்படி இருக்க, பல ஆயிரம் கோடி செலவில் பள்ளிகளுக்குக் கட்டிடங்கள் கட்டியுள்ளோம் என்று அமைச்சர்கள் சட்டப்பேரவையில் கூறுகிறார்கள். அதற்கான வெள்ளை அறிக்கையை வெளியிடுமாறு கோரினோம்.

கடந்த 2022 - 23, 2023 - 24 ஆண்டுகளில் ரூ. 1,887.75 கோடி செலவு செய்ததாக மானியக் கோரிக்கை அட்டவணையில் கூறப்பட்டிருக்கிறது. ஆனால், 2023 - 24 ஆண்டில், மூலதன உட்கட்டமைப்புக்குச் செலவிடப்பட்ட நிதி ரூ.352 கோடி மட்டுமே. எந்தத் திட்டத்தின் கீழ், ரூ. 1,887.75 கோடி செலவிடப்பட்டது?

திமுக அரசை, அமைச்சர்களை நோக்கி, @BJP4Tamilnadu கேள்வி எழுப்பும்போதெல்லாம் சம்பந்தமில்லாமல் ஓடி வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார் @tn_factcheck ஊழியர். ஒவ்வொரு முறையும் அவருக்கும் சேர்த்து விளக்கமளிப்பதும், அவர் பின்னால், திமுக அரசும், அமைச்சர்களும் மறைந்து கொள்வதும்… https://t.co/V8bIVPO18P pic.twitter.com/UYQXzBzM2H

— K.Annamalai (@annamalai_k) March 21, 2025

நபார்டு வங்கியிடமிருந்து பெற்ற, ஊரகக் கட்டமைப்பு வளர்ச்சி நிதி மூலம் சில பணிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றனவே தவிர, நீங்கள் கூறும் செலவினங்கள், மானியக் கோரிக்கையுடன் சற்றும் ஒத்துப் போகவில்லை. கடந்த 2023 - 24 ஆம் ஆண்டு, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ், ரூ.560 கோடி ஒதுக்கீடு செய்ததும், அதில் ஒரு ரூபாய்கூட செலவிடப்படாததும், திமுக அரசு வெளியிட்ட மானியக் கோரிக்கையிலேயே இருக்கிறது. ஆனால் நீங்கள் செலவு செய்ததாகக் கூறும் ரூ. 429.67 கோடி, எந்தத் திட்டத்தின் கீழ் கணக்கு வைக்கப்பட்டுள்ளது?

நிதி ஒதுக்கீடு, செலவீனங்கள் குறித்த சரியான தரவுகள் இருந்தால், எந்தெந்த மாவட்டங்களில், எத்தனை பள்ளிக் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன என்று வெள்ளை அறிக்கை வெளியிடுவதில் என்ன தயக்கம்? என்று கூறியுள்ளார்.

இதையும் படிக்க: மக்கள்தொகை கணக்கெடுப்பு தாமதம்: மத்திய அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

Read Entire Article