மீண்டும் சீரியலுக்கு வந்த ரட்சிதா! அதுவும் இந்த சேனல் தான்! பிரமாண்டமாக தொடங்கிய பூஜை

14 hours ago
ARTICLE AD BOX

மீண்டும் சீரியலுக்கு வந்த ரட்சிதா! அதுவும் இந்த சேனல் தான்! பிரமாண்டமாக தொடங்கிய பூஜை

Television
oi-V Vasanthi
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி, பிக் பாஸ் நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமடைந்த ரட்சிதா மகாலட்சுமி பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் சன் டிவி சீரியலில் நடிக்க இருக்கிறார். இதற்கான பூஜை இன்று பிரமாண்டமாக நடைபெற்று இருக்கிறது. அது குறித்து அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

ஆரம்ப காலகட்டத்தில் எல்லாம் சினிமாவில் அறிமுகம் ஆகி அங்கு வாய்ப்புகள் குறைய தொடங்கிய பிறகுதான் நடிகைகள் சின்னத்திரைக்கு வருவார்கள். ஆனால் இப்போது நிலைமையே வேறாக இருக்கிறது. சின்னத்திறையில் அறிமுகம் ஆகிவிட்டால் எளிமையாக ரசிகர்களிடம் பிரபலமாகிவிடலாம் என்ற நிலைதான் இருக்கிறது.

Television Rachitha Mahalakshmi

காரணம் டிவியில் மட்டுமல்லாமல் சோசியல் மீடியாவிலும் சீரியல் வீடியோக்கள் தான் அதிகமாக வைரலாகி கொண்டு இருக்கிறது. அதனால் பல நடிகைகள் சின்னத்திரையில் இருந்து இப்போது வெள்ளித்திரைக்கு பயணித்து வருகிறார்கள். அந்த வரிசையில் நடிகை ரட்சிதா மகாலட்சுமியும் ஒருவர். இவருக்கு பிரபலம் கிடைத்தது விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் தான். ஆனால் அதற்கு முன்பு சன் டிவியில் இளவரசி, விஜய் டிவியில் பிரிவோம் சந்திப்போம் போன்ற பல சீரியல்களில் நடித்திருக்கிறார்.

சன் டிவியில் இளவரசி சீரியலில் மட்டும் தான் இவர் நடித்திருக்கிறார். அதுபோல விஜய் டிவி மட்டுமல்லாமல் கலர் தமிழ் மற்றும் ஜீ தமிழ் சீரியல்களிலும் நடித்துக் கொண்டிருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டார். அதற்குப் பிறகு சில திரைப்படங்களில் நடித்திருந்தார். அதிலும் சமீபத்தில் அவர் நடித்த ஃபயர் திரைப்படம் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுவரைக்கும் சீரியலில் ஹோமிலியாக பார்த்து வந்த ரட்சிதாவா இது என்று ரசிகர்கள் வியந்து போகும் அளவிற்கு அந்த திரைப்படத்தில் அவருடைய காட்சிகள் இருந்தது. இந்த நிலையில் ரட்சிதா மகாலட்சுமி இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களிடம் மகிழ்ச்சி செய்தியை பகிர்ந்து இருந்தார்.

அதில் சூட்டிங் ஸ்பாட்டில் பூஜை நடக்கும் புகைப்படங்கள் இருந்தது. அதை பார்க்கும்போது இது திரைப்படத்திற்கான பூஜையாக இருக்கும் என்று நினைக்கப்பட்ட நிலையில் இது சீரியலுக்கான பூஜை என்று தெரிய வந்திருக்கிறது. அதிலும் சன் டிவியில் விரைவில் வெளியாக இருக்கும் திகில் கலந்த சீரியலுக்கான பூஜையாம்.

சீரியல் நடிகரோடு மணக்கோலத்தில் நடிகை மகாலட்சுமி புகைப்படம்.. அப்போ ரவீந்தர்? விஷயம் இதுதானா?
சீரியல் நடிகரோடு மணக்கோலத்தில் நடிகை மகாலட்சுமி புகைப்படம்.. அப்போ ரவீந்தர்? விஷயம் இதுதானா?

ஏற்கனவே சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் என்று எந்த சேனல் எடுத்தாலும் அங்கு அரைச்ச மாவை தான் அழைத்துக் கொண்டிருக்கிறார்கள். இப்போது புதிய கோணத்தில் இந்த சீரியல் உருவாக இருக்கிறது என்று கூறப்படுகிறது. அதுபோல பூஜையில் ரச்சிதாவோடு இருப்பவர்கள் யாரும் பழக்கமானவர்களாக தெரியவில்லை. புதியவர்களாக தான் தெரிகிறார்கள். அதனால் இந்த சீரியலில் ரட்சிதா தான் முக்கிய கேரக்டரில் இருக்கிறார் என்று தெரிகிறது.

அதுபோல இன்னும் சிலர் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரசிகர்கள் பலரும் ரச்சிதாவிற்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள். ரட்சிதா சீரியல் நடிகரான தினேஷ் கார்த்திக்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் விஜய் டிவியில் பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியலில் ஒன்றாக நடிக்கும் போது காதலித்தனர்.

பிறகு சில வருடங்களிலேயே திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு ரட்சிதா தொடர்ந்து சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்தார். அதுபோல தினேஷும் நடித்துக் கொண்டிருந்தார். ஆனால் இவர்கள் இருவருக்கும் சில கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்திருப்பதாக செய்திகள் வைரலாகி வந்தது. அதை உண்மை என்று சொல்லும் வகையில் ரட்சிதா தினேஷுடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்கள் எல்லாவற்றையம் சோசியல் மீடியா பக்கங்களில் டெலிட் செய்திருந்தார்.

அதுபோல பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரட்சிதா அங்கு தினேஷ் பற்றி எந்த இடத்திலும் பேசவில்லை. ஆனால் தினேஷ் ரச்சிதாவிற்கு முழு சப்போர்ட் செய்து கொண்டு இருந்தார். இதனால் ரச்சிதா நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்ததும் தினேஷை புரிந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால் அதுபோல எந்த சம்பவமும் நடைபெறவில்லை.

ஆனாலும் அதற்கு அடுத்த சீசனில் தினேஷ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். எப்படியாவது டைட்டில் வெற்றி பெற்று ரட்சிதாவின் மனதை மாற்றி மீண்டும் சேர்ந்து வாழ வேண்டும் என்று பல இடங்களில் தினேஷ் சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால் ரட்சிதா தொடர்ச்சியாக தினேஷுக்கு எதிராகவே பதிவு வெளியிட்டுக் கொண்டிருந்தார்.

எங்க வீட்டில் மகிழ்ச்சி செய்தி.. மனைவிக்கு சந்தோஷமாக வாழ்த்துக்கள் சொன்ன ரவீந்தர், குவியும் பாராட்டு
எங்க வீட்டில் மகிழ்ச்சி செய்தி.. மனைவிக்கு சந்தோஷமாக வாழ்த்துக்கள் சொன்ன ரவீந்தர், குவியும் பாராட்டு

இப்போது இருவருக்கும் விவாகரத்து நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது. இருவரும் ஒருவரை பற்றி ஒருவர் பேசாமல் தனித்தனியாக இருக்கிறார்கள் ஆனாலும் ரச்சிதா தற்போது வெளியிட்ட பதிவுக்கு ரசிகர்கள் சிலர் தினேஷுடன் மீண்டும் ரச்சிதா சேர்ந்து வாழ வேண்டும் என்று கமெண்ட் கொடுத்திருப்பதை பார்க்க முடிகிறது.

More From
Prev
Next
English summary
Rachitha Mahalakshmi, who is famous for his Vijay TV, will be playing Sun TV serial after many years. The pooja for this is tremendous today. He is sharing it on his Instagram page.
Read Entire Article