வெளுக்குது விற்பனை.. ரூ.21499 போதும்.. SONY கேமரா.. 3D டிஸ்பிளே.. 5500mAh பேட்டரி.. 80W சார்ஜிங்.. எந்த மாடல்?

3 days ago
ARTICLE AD BOX

வெளுக்குது விற்பனை.. ரூ.21499 போதும்.. SONY கேமரா.. 3D டிஸ்பிளே.. 5500mAh பேட்டரி.. 80W சார்ஜிங்.. எந்த மாடல்?

Mobile
oi-Harihara Sudhan
| Published: Saturday, February 22, 2025, 17:42 [IST]

அமேசான் விற்பனையில் (Amazon Sale) விலை குறைப்பு மட்டுமல்லாமல், பேங்க் டிஸ்கவுண்ட் போக ஐக்யூ இசட்9எஸ் ப்ரோ (iQOO Z9s Pro) போன் ஆர்டருக்கு கிடைக்கிறது. சோனி ஐஎம்எக்ஸ் சென்சார் கேமரா, 3டி கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே, 5500mAh பேட்டரி, 80W ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற பீச்சர்களை பட்ஜெட்டில் கொடுக்கிறது. இந்த ஐக்யூ இசட்9எஸ் ப்ரோ போனின் பீச்சர்களை பார்த்துவிட்டு, உங்களுக்கு ஏற்ற மாடலாக இருக்கிறதா? என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அதேபோல விலை, டிஸ்கவுண்ட் விவரங்களும் இருக்கிறது.

இந்த ஐக்யூ இசட்9எஸ் ப்ரோ போனானது, இந்திய மார்கெட்டில் ரூ.24,999 பட்ஜெட்டில் களமிறங்கியது. இப்போது, அமேசான் தளத்தில் விலை குறைப்பில் ரூ.22,999 பட்ஜெட்டில் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டில் ரூ.1,500 பேங்க் டிஸ்கவுண்ட் கூடுதலாக கிடைக்கிறது. ஆகவே, ரூ.21,499 பட்ஜெட்டில் இப்போது ஆர்டர் செய்து கொள்ளலாம்.

வெளுக்குது விற்பனை.. ரூ.21499 போதும்.. SONY கேமரா.. 3D டிஸ்பிளே மாடல்!

இந்த பேங்க் டிஸ்கவுண்ட் எஸ்பிஐ கிரெடிட் கார்டுக்கு கிடைக்கிறது. இதே ரூ.1,500 டிஸ்கவுண்ட்டானது ஈஎம்ஐ மூலம் ஆர்டர் செய்யும் கஸ்டமர்களுக்கும் கொடுக்கப்படுகிறது. இந்த ஈஎம்ஐ டிஸ்கவுண்ட் எஸ்பிஐ கிரெடிட் கார்டு அல்லது ஐசிஐசிஐ கிரெடிட் கார்டுக்கு கிடைக்கிறது. மேலும், உங்களது பழைய ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.21,650 எக்ஸ்சேஞ்ச் சலுகை கிடைக்கிறது.

ஐக்யூ இசட்9எஸ் ப்ரோ அம்சங்கள் (iQOO Z9s Pro Specifications): இந்த ஐக்யூ போனின் டிசைன் பிரீமியம் லுக் கொடுக்கிறது. லெதர் பேனல் மற்றும் 3டி கர்வ்ட் டிசைனில் 7.99 எம்எம் தடிமன் மட்டுமே வருகிறது. ஆகவே, ஸ்லிம் ஸ்மார்ட்போன் பிரியர்களுக்கு இந்த ஐக்யூ இசட்9எஸ் ப்ரோ மாடல் பக்காவாக இருக்கும். இருப்பினும், 5500mAh பேட்டரி கொடுக்கிறது.

இந்த பேட்டரிக்கு 80W ஃபாஸ்ட் சார்ஜிங் கொடுக்கப்படுகிறது. பர்ஃபாமென்ஸ் மிட்-ரேஞ்ச் லெவலுக்கு எதிர்பார்க்கலாம். ஓஎஸ் மட்டும் ஆண்ட்ராய்டு 14 (Android 14) கிடைக்கிறது. அட்ரினோ 720 ஜிபியு (Adreno 720 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்ட 4என்எம் குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 (4nm Qualcomm Snapdragon 7 Gen 3) சிப்செட் மற்றும் ஃபன்டச் ஓஎஸ் 14 (Funtouch OS 14) வருகிறது.

டிஸ்பிளே பாதுகாப்பு மட்டுமே கிடையாது. ஆனால், பீச்சர்கள் பிரீமியமாக இருக்கின்றன. ஆகவே, வெட் டச் டெக்னாலஜி (Wet Touch Technology) கொண்ட 6.77 இன்ச் (2392 x 1080 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவை பேக் செய்துள்ளது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 300Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. ஃபுல்எச்டி (FHD) ரெசொலூஷன் உள்ளது.

மேலும், எச்டிஆர்10பிளஸ் (HDR10+), 1 பில்லியன் கலர் டெப்த் மற்றும் 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கொடுக்கிறது. இந்த ஐக்யூ இசட்9எஸ் ப்ரோ போனில் 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைக்கிறது. சோனி ஐஎம்எக்ஸ் 882 (Sony IMX 882) சென்சாரும், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) டெக்னாலஜியும் பேக் செய்துள்ளது.

16 எம்பி செல்பீ கேமரா மற்றும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வருகிறது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), டைப்-சி ஆடியோ (Type-C Audio), IP64 டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. லக்ஸ் மார்பிள் ஒயிட் (Luxe Marble White) மற்றும் ஃபிளம்போயன்ட் ஆரஞ்ச் (Flamboyant Orange) கலர்களில் ஆர்டருக்கு கிடைக்கிறது.

Best Mobiles in India
தொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed
Read more about:
English summary
iQOO Z9s Pro With 50MP Camera Sale Under Rs 22000 in Amazon Sale Check Specifications Price
Read Entire Article