பின்றானே இவன்.. ரூ.15,630 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. AMOLED டிஸ்பிளே.. 50MP கேமரா.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்?

3 hours ago
ARTICLE AD BOX

பின்றானே இவன்.. ரூ.15,630 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. AMOLED டிஸ்பிளே.. 50MP கேமரா.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்?

Mobile
oi-Harihara Sudhan
| Published: Tuesday, February 25, 2025, 18:31 [IST]

சீன மார்கெட்டில் பட்ஜெட் விலையில் ஃபுல்எச்டிபிளஸ் அமோலெட் டிஸ்பிளே, ஓம்னிவிஷன் மெயின் கேமரா, 6000mAh பேட்டரி, 45W ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற பீச்சர்களுடன் ரியல்மி நியோ7எக்ஸ் (Realme Neo7x) வெளியாகி இருக்கிறது. IP69 ரெசிஸ்டன்ட், IP68 ரெசிஸ்டன்ட் மற்றும் IP66 ரெசிஸ்டன்ட் கொண்ட மாடலாக இருப்பதால் மார்கெட்டில் கவனம் பெற்றுள்ளது. இந்த ரியல்மி நியோ7எக்ஸ் போனின் முழு பீச்சர்கள் மற்றும் விலை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ரியல்மி நியோ7எக்ஸ் அம்சங்கள் (Realme Neo7x Specifications): இந்த நியோ மாடலில் விசி கூலிங் சிஸ்டம் (VC Liquid Cooling System) மற்றும் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 6000mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த பேட்டரி இருந்தும், 7.97 எம்எம் தடிமனில் ஸ்லிம் பாடி கொடுக்கிறது. அதேபோல 194 கிராம் எடை மட்டுமே வருகிறது. ஓரளவு காம்பாக்ட் ஃபீல் கொடுக்கிறது.

பின்றானே இவன்.. ரூ.15,630 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. AMOLED டிஸ்பிளே!

கேமிங் பிரியர்களுக்கான பிளாட் டிசைனில் 6.67 இன்ச் (2400 ×1080 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் மற்றும் ஏஐ ஐ புரொடெக்சன் (AI Eye Protection) கிடைக்கிறது. மேலும், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 2000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 180Hz டச் சாம்பிளிங் ரேட் வருகிறது. 16.7 மில்லியன் கலர் டெப்த் உள்ளது.

இந்த ரியல்மி நியோ7எக்ஸ் போனில் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட் மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட் களமிறங்கி இருக்கிறது. அட்ரினோ 810 ஜிபியு (Adreno 810 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்ட 4என்எம் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 4 (4nm Octa Core Snapdragon 6 Gen 4) சிப்செட் கிடைக்கிறது. ரியல்மி யுஐ 6.0 (realme UI 6.0) கொண்டிருக்கிறது.

லேட்டஸ்ட் பீச்சர்களுடன் கிடைக்கும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) வருகிறது. பட்ஜெட் மாடலாக இருந்தும், ஓம்விஷன் ஓவி50டி40 (OmniVision OV50D40) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. இந்த கேமராவுக்கு 2 எம்பி போர்ட் கேமரா மற்றும் 16 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. இந்த ரியல்மி நியோ7எக்ஸ் போனில் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) வருகிறது.

இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), டைப்-சி ஆடியோ (Type-C Audio), டைப்-சி சார்ஜிங் (Type-C Charging) மற்றும் டூயல் நானோ சிம் சிலாட் (Dual Nano SIM Slot) கிடைக்கிறது. இந்த ரியல்மி நியோ7எக்ஸ் போனில் சில்வர் விங் மெக்கா (Silver Wing Mecha) மற்றும் டைட்டானியம் கிரே ஸ்டார்ம் (Titanium Gray Storm) கலர்கள் கிடைக்கின்றன.

இந்த பீச்சர்களுடன் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.15,630ஆக இருக்கிறது. அதேபோல 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.19,240ஆக இருக்கிறது. இப்போது சீன மார்கெட்டில் வெளியாகி இருக்கிறது. அதோடு விற்பனை தொடங்கப்பட்டுவிட்டது. இந்தியாவிலும் அடுத்த சில வாரங்களில் இந்த ரியல்மி மாடலை எதிர்பார்க்கலாம்.

Best Mobiles in India
தொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed
Read more about:
English summary
Realme Neo7x With 50MP Camera 6000mAh Battery Launched in China Check Specifications Price
Read Entire Article