மார்ச் 3 இல் புது POCO மாடல் வருவதால் இப்போதே ரூ.8000 க்கு இறங்கிய பழைய POCO 5ஜி போன்.. எந்த மாடல்?

5 hours ago
ARTICLE AD BOX

மார்ச் 3 இல் புது POCO மாடல் வருவதால் இப்போதே ரூ.8000 க்கு இறங்கிய பழைய POCO 5ஜி போன்.. எந்த மாடல்?

Mobile
oi-Muthuraj
| Updated: Tuesday, February 25, 2025, 19:44 [IST]

இந்தியாவில் போக்கோ நிறுவனத்தின் மிகவும் பிரபலமான எம் சீரீஸின் கீழ் அடுத்த மாடல் எப்போது அறிமுகமாகும் என்கிற வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்ட வேகத்தில், அதே எம் சீரீஸின் கீழ் உள்ள பழைய மாடல் ஒன்று ஆபர் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

புதிதாக வரும் எம் சீரிஸ் மாடல் - போக்கோ எம்7 5ஜி (POCO M7 5G) ஸ்மார்ட்போன் ஆகும். இந்த ஸ்மார்ட்போன் 2025 ஆம் ஆண்டு மார்ச் 3 ஆம் தேதி அறிமுகமாகும் என்று பிளிப்கார்ட் பேனர் வழியாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மறுகையில் அதே பிளிப்கார்ட் வலைத்தளத்தில் போக்கோ எம்6 5ஜி (POCO M6 5G) ஸ்மார்ட்போன் ஆனது தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது.

ரூ.8000 க்கு இறங்கிய பழைய POCO 5ஜி போன்.. எந்த மாடல்?

தற்போது போக்கோ எம்6 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 4ஜிபி ரேம் + 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது, அதன் அசல் எம்ஆர்பி விலை ஆன ரூ.11,999 க்கு பதிலாக 29% நேரடி தள்ளுபடியை பெற்று வெறும் ரூ.8,499 க்கு வாங்க கிடைக்கிறது.

ஒருவேளை நீங்கள் ஏர்டெல் சிம் உடன் லாக் செய்யப்பட்ட போக்கோ எம்6 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 4ஜிபி ரேம் + 64ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனை வாங்கினால், இது அதன் அசல் எம்ஆர்பி விலையான ரூ.12,999 க்கு பதிலாக 39% நேரடி தள்ளுபடியை பெற்று ரூ.7,920 க்கு வாங்க கிடைக்கிறது .

போக்கோ எம்6 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 6.74-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே
- மீடியாடெக் டைமன்சிட்டி 6100+ சிப்செட்
- 8ஜிபி வரை LPDDR4X ரேம்
- 256GB வரை UFS 2.2 ஸ்டோரேஜ்
- 50மெகாபிக்சல் ஏஐ ப்ரைமரி கேமரா
- 18W வயர்டு சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரி

இந்த ஆபர் ஒருபக்கம் இருக்க பிளிப்கார்ட் வலைதளத்தில் மன்த் எண்ட் மொபைல் பெஸ்டிவல் என்கிற சிறப்பு விற்பனையை நடந்து வருகிறது. இந்த விற்பனையின் கீழ் இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 எச்டி (Infinix Smart 8 HD): ரூ.5,999 க்கு வாங்க கிடைக்கிறது. சாம்சங் கேலக்ஸி எப்05 (Samsung Galaxy F05): ரூ.6,299 க்கு வாங்க கிடைக்கிறது. விவோ டி3 லைட் 5ஜி (Vivo T3 Lite 5G): ரூ.9,999 க்கு வாங்க கிடைக்கிறது.

இதேபோல ஒப்போ கே12எக்ஸ் 5ஜி (Oppo K12x 5G): ரூ.10,749 க்கு வாங்க கிடைக்கிறது. ஒப்போ எப்27 5ஜி (Oppo F27 5G): ரூ.19,499 க்கு வாங்க கிடைக்கிறது. இன்பினிக்ஸ் நோட் 40 ப்ரோ பிளஸ் (Infinix Note 40 Pro Plus): ரூ.19,999 க்கு வாங்க கிடைக்கிறது. இன்பினிக்ஸ் நோட் 40 5ஜி (Infinix Note 40 5G): ரூ.14,999 க்கு வாங்க கிடைக்கிறது.

மேலும் நத்திங் போன் 2ஏ (Nothing Phone 2a): ரூ.19,999 க்கு வாங்க கிடைக்கிறது. மோட்டோரோலா எட்ஜ் 50 பியூஷன் (Motorola Edge 50 Fusion): ரூ.19,999 க்கு வாங்க கிடைக்கிறது. மோட்டோரோலா ஜி85 5ஜி (Moto G85 5G): ரூ.16,999 க்கு வாங்க கிடைக்கிறது. விவோ டி3எக்ஸ் 5ஜி (Vivo T3x 5G): ரூ.11,499 க்கு வாங்க கிடைக்கிறது.

இதேபோல மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ (Motorola Edge 50 Neo) ரூ.19,999 க்கு வாங்க கிடைக்கிறது. மோட்டோரோலா ஜி64 5ஜி (Motorola G64 5G): ரூ.12,999 க்கு வாங்க கிடைக்கிறது. விவோ டி3 5ஜி (Vivo T3 5G): ரூ.16,999 க்கு வாங்க கிடைக்கிறது. ரியல்மி 12எக்ஸ் 5ஜி (Realme 12X 5G) ரூ.13,499 க்கு வாங்க கிடைக்கிறது. ரியல்மி பி1 5ஜி (Realme P1 5G): ரூ.12,749 க்கு வாங்க கிடைக்கிறது.

Best Mobiles in India
தொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed
Read more about:
English summary
POCO M6 5G Selling At Discounted Price Ahead POCO M7 5G India Launch on March 3
Read Entire Article