ARTICLE AD BOX
பிப்.27 வரை பொறுங்க.. கம்மி விலை.. 50எம்பி கேமரா.. இந்தியாவுக்கு வரும் Samsung 5ஜி போன்கள்.. எந்த மாடல்?
சாம்சங் நிறுவனம் தனது புதிய சாம்சங் கேலக்ஸி எம்06 5ஜி (Samsung Galaxy M06 5G) மற்றும் சாம்சங் கேலக்ஸி எம்16 5ஜி (Samsung Galaxy M16 5G) ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த இரண்டு புதிய சாம்சங் போன்களும் வரும் பிப்ரவரி 27-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆன்லைனில் இந்த போன்களின் சில அம்சங்கள் வெளியாகி உள்ளது.
சாம்சங் கேலக்ஸி எம்16 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy M16 5G Specifications): சக்திவாய்ந்த மீடியாடெக் டைமன்சிட்டி 6300 பிராசஸர் (MediaTek Dimensity 6300 processor) உடன் சாம்சங் கேலக்ஸி எம்16 5ஜி அறிமுகமாகும். குறிப்பாக இந்த பிராசஸர் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும்.

One UI 7 சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதளத்தைக் கொண்டு இந்த சாம்சங் கேலக்ஸி எம்16 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். மேலும் 5000mAh பேட்டரி உடன் இந்த புதிய சாம்சங் போன் அறிமுகமாகும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.
6.7-இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வசதியுடன் இந்த சாம்சங் கேலக்ஸி எம்16 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. குறிப்பாக பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் சாம்சங் கேலக்ஸி எம்16 5ஜி போன் வெளிவரும். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்தபோனில் உள்ளன.
8ஜிபி வரை ரேம் மற்றும் 256ஜிபி வரை மெமரி வசதியுடன் சாம்சங் கேலக்ஸி எம்16 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த சாம்சங் போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது. குறிப்பாக இந்த கேலக்ஸி எம்16 5ஜி போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சாம்சங் நிறுவனம்.

சாம்சங் கேலக்ஸி எம்06 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy M06 5G specifications): 50எம்பி டூயல் ரியர் கேமரா அமைப்புடன் இந்த சாம்சங் கேலக்ஸி எம்06 5ஜி போன் வெளிவரும். மேலும் இதில் 8எம்பி செல்பி கேமராவும் உள்ளது. பின்பு அமோலெட் (AMOLED) டிஸ்பிளே, 8ஜிபி ரேம், 5000mAh பேட்டரி மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற அம்சங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த போனின் சில விவரங்கள் மட்டுமே வெளியாகி உள்ளது. கூடிய விரைவில் கேலக்ஸி எம்06 5ஜி போனின் அனைத்து அம்சங்களும் வெளியாகும்.
ஆன்லைனில் வெளியான தகவலின்படி, இந்த இரண்டு போன்களும் ரூ.15,000-க்கு கீழ் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த சாம்சங் கேலக்ஸி எம்06 5ஜி மற்றும் சாம்சங் கேலக்ஸி எம்16 5ஜி போன் வெளிவரும் என்பதால் நல்ல வரவேற்பு இருக்கும். பின்பு அமேசான் (Amazon) தளத்தில் இந்த போன்கள் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.