ARTICLE AD BOX
“இது பட்ஜெட் பற்றிய உங்களில் ஒருவன்!” என்ற தலைப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி, பதில்கள் வடிவில் நிகழ்த்திய உரையாடலை வீடியோவாக வெளியிட்ட நிலையில், “வெற்று பட்ஜெட்டை மறைக்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வீடியோஷூட் நடத்தியிருக்கிறார்” எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
2025-2026-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை வெளியீட்டிற்கு பின்னான நிலவரம் குறித்தும் “இது பட்ஜெட் பற்றிய உங்களில் ஒருவன்!” என்ற தலைப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி, பதில்கள் வடிவில் நிகழ்த்திய விரிவான உரையாடலை வீடியோவாக வெளியிட்டுள்ளார். அதில், எதிர்க்கட்சிகளுடைய விமர்சனங்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என்ற கேள்விக்கு பதிலளித்துப் பேசியுள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “ஆக்கப்பூர்வமான விமர்சனமாக இருந்தால், அதை நாம் பரிசீலிக்கலாம். ஆனால், ஏதாவது குறை சொல்லவேண்டும் என்பதற்காகவே, சிலர் சொல்வது அரசு மேல் இருக்கிற வன்மம் மட்டும்தான் என்பது தெரிகிறது. உருப்படியான எதுவும் அதில் இல்லை. நாம் எந்த அளவுக்கு சிறப்பாக செயல்பட்டு இருக்கிறோம் என்பதற்கு சில எடுத்துக்காட்டுகளை ஆதாரப்பூர்வமாக சொல்ல விரும்புறேன்.” என்று கூறியுள்ளார்.
இந்நிலையில், “இது பட்ஜெட் பற்றிய உங்களில் ஒருவன்!” என்ற தலைப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோ குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
மக்களுக்கு ஒன்றுமே இல்லாத வெற்று பட்ஜெட்டை மறைக்க,
ஒரு வீடியோஷூட் நடத்தி வெளியிட்டுள்ளார்,
"FAILURE மாடல்அரசின் விளம்பர மாடல்”
திரு. @mkstalin.
உலகப் பொருளாதார அறிஞர்களுடன் இணைந்து இந்த பட்ஜெட்டை தயாரித்ததாக அவர் கூறியிருப்பது, இந்த பொருளாதார ஆண்டின் நல்ல நகைச்சுவை.
தன்…
இது குறித்து, எதிர்க்கட்சித் தலைவரும் அ.தி.மு.க பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: “மக்களுக்கு ஒன்றுமே இல்லாத வெற்று பட்ஜெட்டை மறைக்க, ஒரு வீடியோஷூட் நடத்தி வெளியிட்டுள்ளார், "FAILURE மாடல்அரசின் விளம்பர மாடல்”
மு.க. ஸ்டாலின்.
உலகப் பொருளாதார அறிஞர்களுடன் இணைந்து இந்த பட்ஜெட்டை தயாரித்ததாக அவர் கூறியிருப்பது, இந்த பொருளாதார ஆண்டின் நல்ல நகைச்சுவை.
தன் பட்ஜெட் பற்றி நாளேடுகள் என்ன சொல்கின்றன என்பதை ஆர்வத்தோடு படித்துக் காட்டும் இவர், அதே நாளேடுகளில் நாள்தோறும் வருகின்ற இந்த ஆட்சியின் அவலங்கள் குறித்த செய்திகளை இதே அர்ப்பணிப்புடன் படித்துக் காண்பிப்பாரா?
உலகத்திலேயே தன் கட்சியின் ஐ.டி. விங்கைச் சேர்ந்தவர்களின் பதிவுகளையே, மக்கள் கருத்தாகக் கருதி புளகாங்கிதம் அடையும் ஒரே முதலமைச்சர் ஸ்டாலின் தான்!
தன் பட்ஜெட் பற்றி தலைமைச் செயலக ஊழியர்கள் நினைப்பது என்ன? ஆசிரியர்கள் நினைப்பது என்ன? இதர அரசு ஊழியர்கள் நினைப்பது என்ன? விவசாயிகள், தொழில் முனைவோர், உழைக்கும் மக்கள் நினைப்பது என்ன என்பதே அறியாமல், "ரூ" போட்டதால் பட்ஜெட் ஹிட் ஆகிவிட்டது என்று சினிமா வசனம் பேசுகிறார்!
பட்ஜெட் ஹிட் ஆவது என்பது அறிவிப்பதில் இல்லை- செயல்படுத்துவதில் என்பதே உண்மை. அப்படி பார்த்தால், தி.மு.க ஆட்சிக்கு வந்து போட்ட 5 பட்ஜெட்டுமே UTTER FLOP தான்!
72 ஆண்டுகால தமிழ்நாட்டு ஆட்சிகளின் மொத்த கடனையும் 4 ஆண்டுகளில் வாங்கி, கடன் வாங்குவதில் Record Break மற்றும் Blockbuster சாதனை செய்த ஒரே முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்தான்!
இந்த பட்ஜெட் தான் தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் "தி.மு.க.-வின் இறுதி பட்ஜெட்" என்பது மக்களின் கருத்து .
இந்த பட்ஜெட்…, SIMPLY WASTE..!” என்று எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.