ARTICLE AD BOX
கார்த்தியின் லைன் அப் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வெளிவந்துள்ளது.
நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவில் வலம் வரும் முக்கியமான நடிகர்களில் ஒருவர் ஆவார். அந்த வகையில் இவரதுவின் நடிப்பில் வெளியான பருத்திவீரன், பையா, தீரன் அதிகாரம் ஒன்று, சர்தார் ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றி படங்களாக அமைந்தன. கடந்தாண்டில் இவரது நடிப்பில் மெய்யழகன் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்றது. அடுத்தது இவர் சூது கவ்வும் படத்தின் இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் வா வாத்தியார் எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்தது இவர், சர்தார் படத்தின் இயக்குனர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் சர்தார் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது.
இதற்கிடையில் இவர், டாணாக்காரன் படத்தின் இயக்குனர் தமிழ் இயக்கத்தில் தனது 29 வது திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். கடல் கொள்ளையர்கள் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தில் கார்த்தியுடன் இணைந்து வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாக இருப்பதாகவும் 2025 மே மாதத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பை தொடங்க படக்குழு திட்டமிட்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது.
மேலும் நடிகர் கார்த்தி, மாரி செல்வராஜ் இயக்கத்தில் பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் புதிய படம் ஒன்றில் நடிக்கப் போவதாகவும் பல தகவல்கள் சமூக வலைதளங்களில் உலா வருகிறது.
இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கைதி 2 திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார் கார்த்தி. இவர்களது கூட்டணியில் வெளியான கைதி திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. அதுமட்டும் இல்லாமல் லோகேஷ் கனகராஜ் நடிகர் கார்த்தியை இந்த படத்தில் வேறொரு பரிமாணத்தில் காட்டி இருந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தொடங்கும் என சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் பின்னர் கார்த்தி, ஹனுமான் படத்தின் இயக்குனர் பிரசாந்த் வர்மா, பா. ரஞ்சித், ஹெச். வினோத், ஏ.ஆர். முருகதாஸ், சுந்தர். சி, கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோரிடம் கதை கேட்டிருப்பதாகவும் வருங்காலத்தில் இவர்களின் இயக்கத்தில் தன்னுடைய அடுத்தடுத்த படங்களில் நடிப்பார் எனவும் பல தகவல்கள் வெளியாகி எதிர்பார்ப்பினை அதிகப்படுத்தி வருகிறது. இவ்வாறு கிட்டத்தட்ட 10 படங்களுக்கும் மேலாக சூப்பர் ஹிட் பட இயக்குனர்களுடன் கைகோர்த்து பணியாற்ற இருக்கிறார் கார்த்தி. எனவே இவருடைய லைன் அப் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இனிவரும் நாட்களில் ஒவ்வொன்றாக வெளியாகும் என நம்பப்படுகிறது.