வெற்றிக்கு வழிகாட்டும் சிந்தனை துளிகள் அவசியம் படிக்க வேண்டிய பதிவுகள்..!!

2 hours ago
ARTICLE AD BOX

இலக்குகளை நோக்கு கையில் கவனமாக இருங்கள் ; வாழ்வின் வழிமுறைகளை பாருங்கள் நீங்கள் எப்படி வாழ வேண்டும் என்று தீர்மானியங்கள்…

அவ் வழிமுறைக்குள் வாழ நீங்கள் என்ன செய்ய முடியும் என தீர்மானியுங்கள் – ஹன்டர் தாமஸ்…

எல்லோருக்குமே வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது ஆனால் அதற்கான வழிகள் என்ன என்பதிலும் தாங்களால் விரும்பியதை அடைய முடியுமா என்ற சந்தேகமும் அவர்களை முழுமையாக செயல்பட விடாமல் தடுக்கிறது. அனைவருக்கும் அனைத்து திறமைகளும் உண்டு ஆனால் அந்த திறமைகளை கண்டறிந்து செயல்படுத்துவதில் தான் இருக்கிறது ஒருவருடைய வெற்றி. ஒரு சிலர் தங்கள் விருப்பத்திற்கான இலக்குகளை வெகு எளிதில் கண்டறிந்து அதை நோக்கிய செயல்களில் ஈடுபட்டு வெற்றி மனிதர்களாக பாராட்டப்படுவார்கள். ஒரு சிலரும் தங்கள் விருப்பத்திற்குரியது எது என்பதை கண்டறியது அடுத்தவரின் துணையை நாடுவார்கள் அல்லது தாங்கள் விரும்பிய துறைகளில் செயல்புரிய முடியுமா என்று திறமைகள் இருந்தும் தங்கள் மேல் நம்பிக்கை இன்றி செயல்படுவார்கள். வெற்றிக்கு இதுவே முக்கிய பின்னடைவாகும்..

நாம் விரும்பிய பொருளை நாம் விரும்பிய இலக்கை அடைந்தாக வேண்டும் அல்லது விருப்பம்போல் ஒரு செயல் நடந்தாக வேண்டும் என்றால் முதலில் நமது விருப்பத்திற்குரியது எதுவென்று புரிந்து கொள்ள வேண்டும். அந்த செயலுக்கு யார் யாருடைய ஒத்துழைப்பு தேவைப்படுகிறது என்பதை வரிசைப்படுத்த வேண்டும் ஏனெனில் எந்த ஒரு காரியமும் கூட்டு முயற்சி என்று வெற்றி அடைந்ததாக சரித்திரம் கிடையாது. நமது இறக்கிற்கான விருப்பம் நியாயமானதாக இருந்தால் அதற்கு அடுத்தவர் உண்மையான ஆர்வம் உதவியும் ஒத்துழைப்பும் ஆதரவும் கிடைக்கும். ஆனால் துவக்கத்திலேயே நமது விருப்பத்தை முழுமையாக எவரிடமும் சொல்லி விடக்கூடாது ஏனெனில் ஒரு செயலுக்கு தடையாக இருப்பவர்கள் நம்மை சுற்றியே இருப்பார்கள் என்பது ஊர் அறிந்து உண்மை. நம்மிடம் எண்ணிக்கையற்ற விருப்பங்கள் இருக்கலாம் ஆனால் அதில் எதை முதலில் அடைவது அல்லது அதற்கான இலக்கு எது என்பதில் தெளிவு இருக்க வேண்டும். அது நமது வாழ்க்கை முறைக்கு சரியாக வருமா என்பதிலும் கவனம் தேவை. முக்கியமாக நமது இலக்கு என்பது நடைமுறைக்கு பொருந்தாததாக இருந்தால் அதனால் விலையும் பயனும் மனநிறைவும் அதிகம் இருக்கும் நடைமுறை என்பது சாத்தியங்களைக் கொண்டது. அறிவு ஆற்றல் வாய்ப்பு சக மனிதர்களின் ஒத்துழைப்பு சூழல் போன்றவை தான் அந்த சாத்தியங்கள்.இவை அனைத்தும் சேர்ந்து ஒரு காரியத்தை ஒரு அல்லது ஒரு செயலை நிகழ்த்தும் தன்மை கொண்டது ஆகவே நாம் எதை அடைய விரும்புகிறோமோ அதை அடையும் முயற்சியில் தெளிவாக இறக்கை நிர்ணயித்து அந்த செயலுக்கு துணை புரிபவர்களின் ஒத்துழைப்பை நாடி அந்த செயல் நமது வாழ்க்கை முறைகளுக்குள் பொருந்தி போகிறதா என்பதை கவனித்து அதன் பின் தீர்மானித்து செயலில் இறங்கினால் வெற்றி நமதே..!!

Read Entire Article