ARTICLE AD BOX
வெறும் 898 கிராம் தான்.. Apple-ன் புதிய MacBook Air-க்கு போட்டியாக Tecno Megabook S14 அறிமுகம்!
ஆப்பிள் நிறுவனம் அதன் புதிய மேக்புக் ஏர் 2025 மாடல்களை அறிமுகம் செய்த சில மணி நேரங்களில் டெக்னோ நிறுவனமானது ஓஎல்இடி டிஸ்பிளே கொண்ட தனது முதல் லேப்டாப் மாடலை அறிமுகம் செய்துள்ளது. அது டெக்னோ மெகாபுக் எஸ்14 மாடலாகும்; இது எம்டபிள்யூசி 2025 (MWC 2025) நிகழ்வில் அறிமுகமானது!
இருப்பினும் டெக்னோ நிறுவனத்தின் புதிய டெக்னோ மெகாபுக் எஸ்14 லேப்டாப் (Tecno Megabook S14 Laptop) மாடலின் விலை நிர்ணயம் என்ன? இது எந்தெந்த சந்தைகளில் வாங்க கிடைக்கும் கிடைக்கும் என்கிற விவரங்கள் வெளிப்படுத்தவில்லை. இப்போதைக்கு இது டெக்னோ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பட்டியலிடப்பட்டு உள்ளது.

டெக்னோ மெகாபுக் எஸ்14 லேப்டாப்பின் முக்கிய அம்சங்கள்:
- 14-இன்ச் 2.8கே (2800 × 1600 பிக்சல்ஸ்) ஓஎல்இடி டிஸ்பிளே
- 91 சதவிகித ஸ்க்ரீன் டூ பாடி ரேஷியோ
- 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
- 440 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்
- விண்டோஸ் 11
- 12 கோர் ஸ்னாப்டிராகன் எக்ஸ் எலைட் சிப் அல்லது இன்டெல் கோர் அல்ட்ரா 7 ப்ராசஸர்ஸ்
- 32ஜிபி வரை LPDDR5 ரேம்
- 2டிபி எஸ்எஸ்டி ஸ்டோரேஜ்
- 2 மெகாபிக்சல் கேமரா
- டிடிஎஸ் எக்ஸ் அல்ட்ரா உடன் இரண்டு 2W ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
- வைஃபை 6இ மற்றும் ப்ளூடூத் 5.4
- பேக்லிட் கீபோர்ட்
- பவர் பட்டனில் பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர்
- 65W பவர் அடாப்டரை பயன்படுத்தி சார்ஜ் செய்யக்கூடிய 50Wh பேட்டரி
- 16 மணிநேர பேட்டரி லைஃப்
- 898 கிராம் எடை கொண்டுள்ளதால், இது உலகின் மிக இலகுவான 14 இன்ச் ஓஎல்இடி லேப்டாப் என்று டெக்னோ நிறுவனம் கூறுகிறது
ஆப்பிளின் புதிய மேக்புக் ஏர் 2025 மாடல்களின் இந்திய விலை மற்றும் விற்பனை விவரங்கள்: 16ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் உடன் வரும் 13-இன்ச் ஆப்பிள் மேக்புக் ஏர் 2025 மாடல் ரூ.99,900 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல 16ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் உடன் வரும் 15-இன்ச் ஆப்பிள் மேக்புக் ஏர் 2025 மாடல் ரூ.1,24,900 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
ஆப்பிள் மேக்புக் ஏர் 2025 முக்கிய அம்சங்கள்: மேக்புக் ஏர் 2025 மாடல் ஆனது 13-இன்ச் (2,560×1,664 பிக்சல்ஸ்) மற்றும் 15-இன்ச் (2,880×1,864 பிக்சல்ஸ்) சூப்பர் ரெடினா டிஸ்பிளேக்களை கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேக்கள் 224பிபி பிக்சல் டென்சிட்டி மற்றும் 500 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸை கொண்டது. ஆப்பிள் மேக்புக் ஏர் 2025 ஆனது எம்4 சிப் உடன் வருகிறது.
இதில் நான்கு பெர்பார்மென்ஸ் கோர்கள் மற்றும் நான்கு எஃபீஷியன்சி கோர்கள் கொண்ட 10-கோர் சிபியு உள்ளது. இந்த லேப்டாப்பில் 16-கோர் நியூரல் எஞ்சின், 8-கோர் ஜிபியு மற்றும் ஹார்டுவேர் ஆக்சிலரேட்டட் ரே டிரேசிங்கிற்கான ஆதரவும் உள்ளது. மேக்புக் ஏர் 2025 மாடலை 24ஜிபி வரை ரேம் மற்றும் 2டிபி எஸ்எஸ்டி ஸ்டோரேஜ் உடன் கட்டமைக்க முடியும.
மேலும் இது ஸ்பேஷியல் ஆடியோ மற்றும் த்ரீ-மைக் செரீஸ் உடன் கூடிய குவாட் ஸ்பீக்கர் செட்டப்பையும் கொண்டுள்ளது. இந்த லேப்டாப்பில் உள்ள கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொறுத்தவரை இது Wi-Fi 6E மற்றும் ப்ளூடூத் 5.3 ஆகியவைகளை கொண்டுள்ளது. மேலும் இது இரண்டு தண்டர்போல்ட் 4/ யூஎஸ்பி 4 போர்ட்கள், ஒரு மேக்சேப் 3 சார்ஜிங் போர்ட் மற்றும் 3.5மிமீ ஆடியோ ஜாக் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
ஆப்பிளின் இந்த புதிய மேக்புக் ஏர் 2025 மாடல் ஆனது டச் ஐடி பட்டனையும் கொண்டுள்ளது, இது லேப்டாப்பை அன்லாக் செய்ய பயன்படுகிறது. இது ஃபோர்ஸ் க்ளிக்குகள் மற்றும் மல்டி-டச் சைகைகளுக்கான ஆதரவுடன் ஃபோர்ஸ் டச் டிராக்பேடையும் கொண்டுள்ளது. சென்டர் ஸ்டேஜ் மற்றும் டெஸ்க் வியூவுக்கான ஆதரவுடன் 1080p ஃபேஸ்டைம் கேமராவும் உள்ளது.
பேட்டரியை பொறுத்தவரை 13-இன்ச் மேக்புக் ஏர் 2025 மாடல் ஆனது 53.8Wh லித்தியம்-பாலிமர் பேட்டரியை 70W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் கொண்டுள்ளது. ஆனால் இது 30W யூஎஸ்பி டைப்-சி பவர் அடாப்டருடன் அனுப்பப்படுகிறது. மறுகையில் உள்ள 15-இன்ச் மாடல் சற்று பெரிய 66.5Wh பேட்டரியை கொண்டுள்ளது. ஆப்பிளின் கூற்றுப்படி இது 15 மணிநேர இண்டர்நெட் ப்ரவுஸிங் மற்றும் ஆப்பிள் டிவி ஆப் மூலம் 18 மணிநேர வீடியோ பிளேபேக்கை வழங்கும்.