வெயில் வருது... வெயில் வருது... உஷாராகுங்கோ!

7 hours ago
ARTICLE AD BOX

இக் கோடையில் இந்த குளு குளு ரெசிபிகள் செய்து சாப்பிட உடல் ஆரோக்கியம் பெறலாம்.

* நன்னாரி வேரை தட்டி தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் உடல் சூடு தணியும்.

* எலுமிச்சை ஜுஸில் உப்பு கலந்தோ, சர்க்கரை சேர்த்து தினமும் குடித்தால் நீர்க்கடுப்பு குறையும்.

* மணத்தக்காளிக் கீரையில் நீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்து வடிகட்டி 1 டம்ளர் தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து குடித்தால், உடல் சூடு குறைந்து வயிற்றுப்புண், வாய்ப்புண் குணமாகும்.

* சிலருக்கு எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் நாக்கு வறட்சியாகவே இருக்கும். இதற்கு பார்லியைக் கஞ்சி வைத்து அதில் சிறிது தேன் கலந்து குடித்து வந்தால் நாவறட்சி நீங்கும்.

இதையும் படியுங்கள்:
குழந்தைகள் முன் செய்யக்கூடாத சில விஷயங்கள்!
Summer tips

* சிலருக்கு உடல் சூடு காரணமாக உடலில் கட்டி வரும். இதற்கு இளசான நுங்குகளை சிறு துண்டுகளாக நறுக்கி காய்ச்சி ஆறிய பாலில் போட்டு சிறிது சர்க்கரை ஏலத்தூள் சேர்த்து சாப்பிட்டால் உடல் சூடு தணியும் கட்டிகளும் மறையும்.

* ஒரு கப் ஜவ்வரிசியில் 2 கப் தண்ணீர் ஊற்றி வேக வைத்து ஆறிய பின் மோர் ஊற்றி உப்பு சேர்த்து கரைத்துக் குடித்தால் கோடை காலத்தில் ஏற்படும் வயிற்று வலி, உடல் சூடும் தணியும்.

* புழுங்கல் அரிசி 1/2 கப் , முழு உளுந்து 2 ஸ்பூன், வெந்தயம் ஸ்பூன் , சீரகம் 1 டீஸ்பூன் சேர்த்து கஞ்சியாக வேக வைத்து உப்பு சேர்த்து குழைய வைத்துக் குடித்தால் உடல் சூடு குறையும்.

* கசகசாவை முழுதாக அரைத்து கொதிக்க வைத்த பாலில் சேர்த்து குடித்தால் வெயில் சூட்டினால் வரும் வயிற்று வலி நீங்கும். ஒரு டம்ளர் பாலுக்கு ஒரு டீஸ்பூன் சர்க்கரை, 2 ஸ்பூன் விழுது சேர்த்து 2 வாரம் குடித்து வந்தால் கோடைச் சூட்டினால் வரும் எந்த நோயும் வராது.

இதையும் படியுங்கள்:
சுய ஒழுக்கமும் கட்டுப்பாடும்!
Summer tips

* 2 தக்காளி பழத்தை மிக்ஸியில் விழுதாக அரைத்து நீர் மோரில் கலந்து உப்பு, சிட்டிகை பெருங்காயத்தூள் கலந்து குடித்தால் வெயிலில் அலைந்த களைப்பும் சோர்வும் பறந்து போகும்.

* தர்பூசணி சாறுடன், சிறிது எறுமிச்சை சாறு, புதினா தழை , சர்க்கைரை சேர்த்து குடித்து வந்தால் உடல் சூடு தணியும்.

* தர்பூசணி வெள்ளை துண்டுகளை துருவி தயிர் பச்சடி செய்து சாப்பிட உடல் ஆரோக்கியம் தரும்.

* நுங்குடன், சர்க்கரை கன்டென்ஸ்டு மில்க் சேர்த்து நன்கு கலந்து குடித்தால் உடல் குளிர்ச்சியாகும்.

Read Entire Article