வெயிட் பண்ணுங்க.. 22 வயசு ஷமி பாய பாக்க போறிங்க.. நான் அதை பார்த்தேன் – அர்ஷ்தீப் சிங் பேட்டி

6 hours ago
ARTICLE AD BOX

இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமியின் மறுவருகை குறித்து இந்திய இளம் வேகப்பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் முக்கியமான விஷயம் ஒன்றை நேற்று இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டி முடிவுக்கு பிறகு பேசி இருக்கிறார்.

நேற்று இங்கிலாந்து அணிக்கு எதிராக கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில், இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முன்னிலை வகிக்கிறது.

ஆச்சரியப்படுத்திய கம்பீர்

நேற்று இந்திய அணியில் பிரதான வேகப்பந்து வீச்சாளராக அர்ஷ்தீப் சிங் மட்டுமே இடம்பெற்று இருந்தார். இதற்கு அடுத்து இரண்டாவது வேகப்பந்து வீச்சாளராக ஹர்திக் பாண்டியா இருந்தார். கேப்டன் சூரியகுமார் யாதவ் மற்றும் பயிற்சியாளர் கம்பீர் இருவரும் எடுத்த இந்த முடிவு எல்லோரையும் ஆச்சரியப்படுத்தியது.

மேலும் ஒரு வருடத்திற்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்பி இருக்கும் முகமது ஷமி நேற்று களம் இறங்குவார் என பலரும் எதிர்பார்த்து காத்து இருந்தார்கள். இந்த நிலையில் நேற்று அவர் இறங்காததால் அவருக்கு இன்னும் காயம் சரியாகவில்லையா? என்கின்ற சந்தேகம் இந்திய ரசிகர்களுக்கு ஏற்பட்டது. தற்போது இந்த கேள்விகளுக்கு இந்திய வீரர்கள் அர்ஷ்தீப் சிங் மற்றும் அபிஷேக் ஷர்மா இருவரும் பதில் அளித்திருக்கிறார்கள்.

22 வயது முகமது ஷமி

இதுகுறித்து அர்ஷ்தீப் சிங் பேசும் பொழுது ” எல்லோரும் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. மீண்டும் நீங்கள் அவரை 22 வயது ஷமி பாயாக பார்க்கப் போகிறீர்கள். பயிற்சியில் ஒரு விஷயத்தை நான் மிகவும் ஆச்சரியத்துடன் பார்த்தேன். அவர் கையில் இருந்து பந்து வெளியேறும் விதம் என்னை பிரமிக்க வைத்தது. அவர் மிகச் சிறப்பான முறையில் மீண்டும் தயாராகி வந்திருக்கிறார். அவருடைய பந்துவீச்சு நம்ப முடியாத அளவுக்கு சிறப்பாக இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க : 17 வருடம்.. குரு யுவராஜ் சிங் சாதனையை உடைத்த சிஷ்யன் அபிஷேக் ஷர்மா.. புது வரலாறு படைத்தார்

இதுகுறித்து நேற்று பத்திரிக்கையாளர் சந்திப்பை எதிர்கொண்ட அபிஷேக் சர்மா பேசும் பொழுது ” முகமது ஷமிக்கு காயம் எதுவும் இல்லை. நேற்று அவர் விளையாடாததற்கு மிக முக்கிய காரணம், சூழ்நிலைக்கு தகுந்தவாறு அணியை தேர்வு செய்வதாக தான் இருக்கும் என்று நினைக்கிறேன். மற்றபடி அவர் நல்ல முறையில் இருக்கிறார்” என்று கூறியிருக்கிறார்.

The post வெயிட் பண்ணுங்க.. 22 வயசு ஷமி பாய பாக்க போறிங்க.. நான் அதை பார்த்தேன் – அர்ஷ்தீப் சிங் பேட்டி appeared first on SwagsportsTamil.

Read Entire Article