2வது சென்னை டி20.. உத்தேச இந்திய பிளேயிங் XI.. ஷமி ஆடுவாரா?.. நீக்கப்படும் வீரர்.. முழு அலசல்

4 hours ago
ARTICLE AD BOX

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நாளை மறுநாள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரண்டாவது டி20 போட்டி நடக்க இருக்கிறது. இதற்கான உத்தேச இந்திய பிளேயிங் லெவன் எவ்வாறு அமையலாம்? என்பது குறித்து பார்க்கலாம்.

தற்போது இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இந்தியாவில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்றுக் கொண்டு வருகிறது. நேற்று நடைபெற்ற இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி சிறப்பான முறையில் செயல்பட்டு ஏழு விக்கெட் வித்தியாசத்தில் அவ்வாறு வெற்றி பெற்று இருக்கிறது.

ஷமியை தீர்மானிக்கும் சென்னை ஆடுகளம்

தற்போது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வேகப் பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் சிவப்பு மண் ஆடுகளமும், மேலும் சுழல் பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் கருப்பு மண் ஆடுகளமும் இருக்கிறது. இரண்டாவது டி20 போட்டிக்கு என்ன மாதிரியான ஆடுகளம் கொடுக்கப்படுகிறது? என்பதை பொறுத்து ஷமி பிளேயிங் லெவனில் சேர்க்கப்படுவது முடிவு செய்யப்படும். ஏனென்றால் முதல் டி20 போட்டிக்கும் கண்டிஷனை பொறுத்து பிளேயிங் லெவன் தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அடுத்த போட்டியில் ஷமி விளையாடுவார் என்றால், மூன்றாவது சுழல் பந்துவீச்சாளராக அணியில் இருக்கும் ரவி பிஸ்னாய் நீக்கப்படலாம். இல்லை பேட்டிங் யூனிட்டில் இருந்து ரிங்கு சிங் நீக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. ஏனென்றால் நிதீஷ் குமார் ரெட்டி ஆல்ரவுண்டர் என்ற வகையில் ஆறாவது பந்துவீச்சாளராக இருப்பதால் ரிங்கு சிங் நீக்கப்படவே வாய்ப்புகள் இருக்கிறது.

மேலும் மாற்றங்கள் நடக்குமா?

இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் முகமது ஷமியை தவிர்த்து மாற்றங்கள் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. வீரர்கள் யாருக்காவது காயம் ஏற்பட்டு இருந்தால் மட்டுமே மாற்றம் நடப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. இல்லையென்றால் முதல் டி20 போட்டிகள் விளையாடிய அணியே விளையாடும்.

மேலும் தற்பொழுது தமிழகத்தில் குளிர்காலம் என்கின்ற காரணத்தினால், இயல்பாகவே இரவில் பனிப்பொழிவு சென்னையில் இருக்கும். இதில் டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு.

இதையும் படிங்க : 20 ஓவர்.. வெறும் 58 ரன்.. இலங்கையை வீழ்த்தி இந்திய பெண்கள் அணி அபார வெற்றி – U19 உலக கோப்பை

அபிஷேக் ஷர்மா, சஞ்சு சாம்சன், திலக் வர்மா, சூரியகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, நிதீஷ் குமார் ரெட்டி, ரிங்கு சிங், அக்சர் படேல், முகமது ஷமி, வருண் சக்கரவர்த்தி மற்றும் அர்ஸ்தீப் சிங்.

The post 2வது சென்னை டி20.. உத்தேச இந்திய பிளேயிங் XI.. ஷமி ஆடுவாரா?.. நீக்கப்படும் வீரர்.. முழு அலசல் appeared first on SwagsportsTamil.

Read Entire Article