ARTICLE AD BOX
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து டி20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடும் நிலையில் நேற்று நடைபெற்ற முதல் டி20 யில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.
இந்த சூழ்நிலையில் இந்திய முன்னாள் வீரர் முகமது கைப் வெற்றிக்கு காரணமாக அமைந்த இந்திய வீரர் குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
திருப்பு முனையை ஏற்படுத்திக் கொடுத்த பவுலர்
நேற்று நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி சிறப்பாக பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது அந்த அணியின் கேப்டன் பட்லர் மற்றும் ஹாரி புரூக், லிவிங்ஸ்டன் ஆகியோரது விக்கெட்டுகளை வீழ்த்தி வருண் சக்கரவர்த்தி பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தார். அதனால் இங்கிலாந்து அணி விரைவாக விக்கெட்டுகளை இழந்து 132 ரன்கள் மட்டுமே குவித்தது. அதற்குப் பிறகு இந்திய அணி சுலபமாக அதை சேஸ் செய்து வெற்றி பெற்றது.
சமீபகாலமாக வருண் சக்கரவர்த்தியின் பங்களிப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு அபாரமாக இருந்து வருகிறது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் தற்போது இந்திய அணியும் வாய்ப்பு கிடைத்து தேசிய அணிக்கும் சிறந்த பங்களிப்பினை வெளிப்படுத்தி வருகிறார். இந்த சூழ்நிலையில் இந்தியாவின் முன்னாள் வீரர் முகமது கைஃப் வருண் சக்கரவர்த்தி அடுத்த டி20 உலக கோப்பையின் போது நம்பர் ஒன் பந்துவீச்சாளராக இருப்பார் என சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
அடுத்த நம்பர் ஒன் பவுலர் இவர்தான்
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “வருண் சக்கரவர்த்தி கொல்கத்தா அணிக்கு முக்கிய பந்துவீச்சாளராக இருக்கிறார். சிறப்பாக செயல்பட்டு அந்த அணிக்கு வெற்றிகளையும் பெற்றுக் கொடுக்கிறார். கடந்த முறை கொல்கத்தா அணி சாம்பியன் கோப்பையை கைப்பற்றிய போது அந்த அணிக்காக சிறந்த பங்களிப்பனை வழங்கினார். மிடில் ஆர்டரில் சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தி வரும் நிலையில் 29 வயதில் அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது தற்போது ஒரு முழுமையான வீரராக திகழ்கிறார்.
இதையும் படிங்க:89 ஓவர்.. தமிழ்நாடு அணியை காப்பாற்றிய 18 வயது சிஎஸ்கே வீரர்.. அன்றே கணித்த அஸ்வின்.. ரஞ்சி டிராபி 2025
இந்தியாவில் அடுத்த டி20 உலக கோப்பை நடைபெறும் போது அதில் நம்பர் 1 பந்துவீச்சாளராக இவரே இருப்பார். இவரை எதிர்த்து விளையாடுவது கடினமாக இருக்கும். அனைத்து சுழற் பந்துவீச்சாளர்களையும் விட்டுவிட்டு இவர் விரைவில் நம்பர் ஒன் வீரராக மாறுவார். அவரது பந்துவீச்சில் நிறைய முன்னேற்றம் கண்டுள்ளார். நிறைய பந்துகளை ஸ்டம்ப் லைனுக்கு நேராக வீசுகிறார். கூக்லி பந்துகளை முன்பு நிறைய வீசுவார் ஆனால் இப்போது லெக் ஸ்பின் கற்றுக் கொண்டார். முன்பை விட இப்போது பெரிய கம்பேக் கொடுத்திருக்கிறார்” என கூறியிருக்கிறார்.
The post எழுதி வச்சுக்கோங்க.. அடுத்த டி20 உலக கோப்பைல.. இவர்தான் நம்பர் 1 பவுலர் – முகமது கைஃப் கணிப்பு appeared first on SwagsportsTamil.