ARTICLE AD BOX
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான முகம்மது ஷமி கடந்த 14 மாதங்கள் கழித்து இந்திய அணிக்காக விளையாட தேர்வாகியிருந்தார். அந்த வகையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியானது நேற்று கொல்கத்தா நகரில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது.
22 வயசு முகமது ஷமியை நீங்க பாக்கப்போறிங்க :
இந்த போட்டியில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்த தொடரின் தற்போதைய நிலையில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகித்துள்ளது.
இந்நிலையில் இந்த முதல் போட்டியின் போது இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்திய அணியில் ஒரே ஒரு வேகப்பந்து வீச்சாளராக அர்ஷ்தீப் சிங் மட்டுமே இடம் பிடித்திருந்தார். அவருக்கு துணையாக ஹார்டிக் பாண்டியா வேகப்பந்து வீச்சாளராக செயல்பட்டிருந்தார்.
நேற்றைய இந்த முதல் டி20 போட்டியில் முகமது ஷமி விளையாடுவதற்கு அவர் இன்னும் முழு உடற்தகுதியை எட்டவில்லை என்பதே காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு பயிற்சியின் போதும் அவருக்கு அசவுகரியம் ஏற்பட்டதாலயே அவர் முன்னெச்சரிக்கை காரணமாக முதல் போட்டியில் விளையாடவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்திய அணிக்காக கம்பேக் கொடுக்க காத்திருக்கும் முகமது ஷமி குறித்து பேசிய சக வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங் தனது கருத்தினை தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : எல்லோரும் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க மீண்டும். 22 வயது முகமது ஷமியை நீங்க பார்க்க போறீங்க. ஏனென்றால் பயிற்சியின் போது அவரது கையில் இருந்து வெளியேறும் பந்தின் வேகத்தை பார்த்தேன்.
இதையும் படிங்க : இங்கிலாந்து அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் ஷமி விளையாடாததுக்கு என்ன காரணம்? – உண்மை விவரம் இதோ
அந்த வேகமும், பந்து வெளியேறும் விதமும் என்னை பிரமிக்க வைத்தது. மீண்டும் முகமது ஷமி மிகச்சிறப்பான முறையில் தயாராகி வந்துள்ளார். எனவே அவருடைய பந்துவீச்சு முன்பை விட மிகச் சிறப்பாக இருக்கும் என அர்ஷ்தீப் சிங் கூறியுள்ளார்.
The post 22 வயசு பையன் மாதிரி இருக்காரு.. சீறும் முகமது ஷமி குறித்து பிரமித்து பேசிய – அர்ஷ்தீப் சிங் appeared first on Cric Tamil.