வீட்டை அலங்கரிக்க பழைய வளையல்... இதுமாறி ட்ரை பண்ணுங்க; இனி தூக்கிப்போடவே மாட்டிங்க!

4 days ago
ARTICLE AD BOX

வீட்டில் பழைய வளையல்கள் இருந்தால் அதை தூக்கிப் போட வேண்டும் என்று நினைத்திருக்கிறீர்களா? பழைய வளையல்களைப் பயன்படுத்தி வீட்டை அலங்கரிக்கும் பொருட்களை செய்யலாம் இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்கள். பிறகு பழைய வளையல்களைத் தூக்கிப் போடவே மாட்டீர்கள். பிருந்தா கிரியேட்டிவி டாபிக்ஸ் யூடியூப் சேனலில், பிருந்தா இந்த அலங்காரப் பொருட்களை எப்படி செய்வது என்று செய்து காட்டியுள்ளார். 

Advertisment

வீட்டில் பழைய கண்ணாடி வளையல்கள் அல்லது மெட்டல் வளையல்கள் இருந்தால் எடுத்துக்கொள்ளுங்கள். ஒட்டுவதற்கு ஒரு ஃபெவி பாண்ட் எடுத்துக்கொள்ளுங்கள்.  

முதலில் ஒரு 6 வளையல்களை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்காக ஃபெவி பாண்ட் தடவி ஒட்டுங்கள். இது போல இன்னொரு 6 வளையல்களை வைத்து ஒட்டுங்கள். இப்போது, ஒரு சிவப்பு நிற சாட்டின் டேப் எடுத்து இந்த வளையல்களைச் சுற்றி ஒட்டிவிடுங்கள். 

Advertisment
Advertisement

அடுத்து 3 வளையல்களை ஃபெவி பாண்ட் தடவி ஒட்டுங்கள். இது போல 3 ஒட்டுங்கள். இப்போது, ஒரு நீல நிற சாட்டின் டேப் எடுத்து இந்த வளையல்களைச் சுற்றி ஒட்டிவிடுங்கள். 

முதலில், 6 வளையல்கள் ஒட்டப்பட்ட சிவப்பு நிற சாட்டின் டேப் வளையத்தை எடுத்து, கீழே வையுங்கள். அதன் வளைவுப் பகுதியில் இன்னொன்றை நிற்க வைத்து ஒட்டுங்கள். இதன் மேல் விளிம்பு பகுதியில், நீல நிற சாட்டின் ஒட்டப்பட்ட வளையல்களை இரண்டை அருகருகே வைத்து ஒட்டுங்கள். அதன் மேல் இன்னொரு நீல நிற வளையலை ஒட்டுங்கள். நன்றாகக் காய்ந்ததும், சிவப்பு நிற வளையலில் தேங்காய் நார் எடுத்து கூடு போல சுருட்டி வையுங்கள். அதில் குட்டி பிளாஸ்டிக் குருவி பொம்மை இரண்டு வையுங்கள். அதே போல, ஒவ்வொரு வளையலிலும் ஒரு குட்டி குருவி பொம்மையை ஒட்டுங்கள். பார்க்க அழகாக இருக்கும். இதை உங்கள் வீட்டில் மாட்டி தொங்க விட்டால் ரொம்ப அழகாக இருக்கும்.

அதே போல, வீட்டில் நிறைய பழைய வளையல்கள் இருக்கிறதா, ஒரு 12 வளையல்களை ஃபெவி பாண்ட் போட்டு ஒட்டுங்கள். ஆரஞ்ச் நிறத்தில் உள்ளன் நூல் எடுத்து சிறிது தூரம் சுற்றுங்கள். அடுத்து கிரீன் உள்ளன் நூள் எடுத்து சிறிது தூரம் சுற்றுங்கள். மீண்டும் ஆரஞ்ச் நிறத்தில் உள்ளன் நூல் எடுத்து சிறிது தூரம் சுற்றுங்கள். மீண்டும் கிரீன் உள்ளன் நூள் எடுத்து சிறிது தூரம் சுற்றுங்கள். சுற்றி முடித்ததும். ஒரு ஜிகினா பேப்பர் எடுத்து, நூல் சுற்றப்பட்ட வளையல்களின் ஒரு பகுதியை மூடி ஒட்டிவிடுங்கள். அடுத்து, சுற்றி வண்ண நிற தெர்மோ பீன்களை இடைவெளி விட்டு வரிசையாக ஒட்டுங்கள். இப்போது, இதை உங்கள் வீட்டில் குழந்தைகளின் பென்சில், பேனா போட்டு வைத்துக்கொள்ளும் ஒரு ஸ்டேண்டாக பயன்படுத்திக்கொள்ளலாம். ரொம்ப அழகாக இருக்கும்.

Read Entire Article