ARTICLE AD BOX
உங்களது வீட்டில் மகிழ்ச்சி செழிப்பு மற்றும் பணம் பெருக வேண்டுமென்றால் வாஸ்து சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ள, இந்த 5 விஷயங்களை மட்டும் பின்பற்றினால் போதும்.

Vastu Tips For Happiness And Prosperity : இந்து மதத்தை பின்பற்றுபவர்கள் வாஸ்து சாஸ்திரத்திற்கு ரொம்பவே முக்கியத்துவம் கொடுப்பார்கள். வாஸ்து சாஸ்திரம் அவர்களது வாழ்வில் முக்கியத்துவம் மிக உயர்ந்த முறையில் விவரிக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு விஷயங்களை செய்வதற்கு முன்போ அல்லது செய்யும்போதோ வாஸ்து சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விதிகளை பின்பற்றினால் மட்டுமே அதற்குரிய பலன்கள் மங்களகரமானதாகவும், நேர்மையானதாகவும் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அதே சமயம் வாஸ்து விதிகளை புறக்கணிக்கும் போது விளைவுகள் மோசமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

அந்த வகையில் வாஸ்து சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ள சில முக்கிய விஷயங்கள் பதிவில் கொடுக்கப்பட்டுள்ளன அவற்றின் பின்பற்றுவதன் மூலம் உங்களது வாழ்க்கையில் நல்ல பலன்களை நீங்கள் பெறுவீர்கள். அதாவது உங்களது வீட்டில் மகிழ்ச்சி, செல்வம், செழிப்பு பெருகும். சரி அது என்ன என்பதை பற்றி இப்பொழுது தெரிந்து கொள்ளலாம்.

வாஸ்து சாஸ்திரத்தின் படி, உங்கள் வீட்டில் மகிழ்ச்சி மற்றும் செழிப்பு நிலவவும், பண குவிய வேண்டும் என்று விரும்பினால் உங்களது வீட்டின் வடக்கு திசையில் லட்சுமி தேவியின் படத்தை வைக்க வேண்டும். முக்கியமாக லட்சுமிதேவி தாமரை மலரில் அமர்ந்திருக்கும் படத்தை வைக்க வேண்டும். ஏனெனில், வாஸ்துபடி அது மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது.

வாஸ்து சாஸ்திரத்தின் படி, உங்கள் வீட்டின் சமையலறையில் வடகிழக்கு திசை அல்லது வடகிழக்கு மூலையில் ஒரு சுத்தமான பாத்திரத்தில் தண்ணீரை வைக்க வேண்டும். இப்படி நீங்கள் செய்யும் போது உங்களது வீட்டிலும், வாழ்க்கையிலும் பணப்புழக்கம் அதிகரிப்பதை நீங்கள் காண்பீர்கள். அதுமட்டுமல்லாமல் உங்களது பணம் எங்காவது சிக்கியிருந்தால் அந்த பணத்தை நீங்கள் திரும்ப பெறுவீர்கள்.

வாஸ்து சாஸ்திரத்தின் படி, உங்களது வீட்டில் மகிழ்ச்சி மற்றும் அமைதி பெருக, தினமும் வீட்டில் சிவன் மற்றும் சந்திரனின் மந்திரங்களை உச்சரிக்க வேண்டும். இப்படி நீங்கள் தொடர்ந்து செய்ய தொடங்கும் போது உங்களது குடும்பத்தில் மகிழ்ச்சி மற்றும் அமைதி செழிக்க தொடங்கும்.
இதையும் படிங்க: உங்க வறுமைக்கு காரணமே இதுதான்!! பூஜை அறைல இதை பண்றீங்களா?

உங்களது வாழ்க்கையில் பணம் பெருக வேண்டுமென்றால் உங்களது வீட்டில் ஒரு பிரதான கண்ணாடியை நிறுவ வேண்டும். இந்த கண்ணாடி வடக்கு அல்லது கிழக்கு சுவரில் வைக்கலாம். உங்களது வீட்டின் பிரதான வாயிலுக்கு அருகில் ஒருபோதும் கண்ணாடி வைக்க வேண்டாம் என்பதில் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
இதையும் படிங்க: மஞ்சள் முடிச்சை வீட்டில் 'இந்த' இடத்தில் வைங்க; பண பிரச்சினை தீரும்!

வாஸ்து படி, உங்களது வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகரிக்க வேண்டுமென்றால் உங்கள் வீட்டில் பிரதான நுழைவாயிலில் ஒரு குதிரை லாடத்தை நிறுவ வேண்டும். அதன் வாய் கிழக்கு நோக்கி இருக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இப்படி நீங்க செய்வதன் மூலம் உங்கள் குடும்பத்தினர் தீய கண்களில் இருந்து பாதுகாக்கப்படுவார்கள்.