முட்டை தோசை சாப்பிட்டிருப்பீங்க...ஆனா முட்டை இட்லி சாப்பிடிருக்கீங்களா?

3 hours ago
ARTICLE AD BOX

இட்லி என்றால் காலை உணவின் ராஜா. ஆனால், அதற்கு சிறப்பு சேர்க்க, ஒரு சத்தான, சுவையான, புதுமையான மாற்றம் தேவை. மசாலா இட்லி, பொடி இட்லி, சாம்பார் இட்லி, மினி இட்லி என பல வகையான இட்லிகளை கேள்விபட்டிருப்பீர்கள். வழக்கமாக முட்டை தோசை தான் செய்து சாப்பிட்டிருப்பீர்கள். கொஞ்சம் வித்தியாசமாக, ஆரோக்கியமான பிரேக் ஃபாஸ்டாக முட்டை இட்லி செய்து சாப்பிட்டு பாருங்க. இது இயற்கையாக புரதம் நிறைந்த, மென்மையாகவும், காரசாரமாகவும் இருக்கும். குழந்தைகளும் பெரியவர்களும் விரும்பும் ஒரு உணவாக இருக்கும்.

தேவையான பொருட்கள் : 

இட்லி மாவு - 2 கப்
முட்டை - 4
பச்சை மிளகாய் - 2 (சிறியது)
பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகு தூள் - 1/2 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி -  சிறிதளவு
கருவேப்பிலை - ஒரு சிறிய கொத்து
நல்லெண்ணெய் -  தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

ரெஸ்டாரன்ட் ஸ்டைல் தந்தூரி சிக்கன் வீட்டிலேயே செய்யும் சீக்ரெட் டிப்ஸ்

செய்முறை :

- இட்லி மாவை கெட்டியாக இருக்குமாறு கலக்க வேண்டும். தேவையான அளவு உப்பு சேர்த்து, 15 நிமிடங்கள் ஓய்வெடுக்க விடலாம்.
- முட்டைகளை உடைத்து, பச்சை மிளகாய் நறுக்கியது, மிளகு தூள், பெருங்காயத்தூள், இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ள வேண்டும். இதனால் முட்டையின் பச்சை மணம் நீங்கி, தனித்துவமான சுவை கிடைக்கும்.
- இட்லி தட்டில் சிறிது நல்லெண்ணெய் தடவி, இட்லி மாவை பாதி ஊற்றவும். அதன் மேல் ஒரு டீஸ்பூன் முட்டை கலவை ஊற்ற வேண்டும். மீண்டும், மேலே சிறிது இட்லி மாவை அடைக்கவும்.
- இதனை மிதமான தீயில் 10-12 நிமிடங்கள் ஆவியில் வேக வைக்க வேண்டும். வெந்த பிறகு, இட்லியை மெதுவாக எடுத்து, மேலே கொத்தமல்லி தூவி பரிமாறலாம்.

பரிமாறும் முறைகள் : 

- பச்சை சட்னி, தேங்காய் சட்னியுடன் மிகச்சிறப்பாக இருக்கும்.
- காரம் விரும்புபவர்கள், சிகப்பு சட்னியோ, கருவேப்பிலை பொடியோ சேர்த்து சாப்பிடலாம்.
- சாதாரண இட்லியை விட இது நறுமணம் மிக்கது, சத்தும் அதிகம்.

நாவில் எச்சில் ஊற வைக்கும் கேரளா கிழி பரோட்டா

முட்டை இட்லியின் ஆரோக்கிய நன்மைகள் : 

- மிகுந்த புரதம்  உள்ளதால் முட்டையின் தன்மை உடலுக்கு தேவையான சக்தியைக் கொடுக்கும்.
- கேரளா, தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவின் இணைப்பாக இருக்கும். இது இரு மாநிலங்களிலும் பிரபலமான ஓர் உணவு.
- கொழுப்பு குறைவாக, சத்து அதிகமாக உள்ள காலை உணவாக சாப்பிட ஏற்றது.
- சுலபமாக செரிமானம் ஆகும் என்பதால் இட்லியின் புளிக்காத தன்மை மற்றும் முட்டையின் மென்மை.

இந்த முட்டை இட்லி, உங்கள் வீட்டில் செய்து பார்த்து மென்மையான, சுவையான, ஆரோக்கியமான உணவாக அனுபவியுங்கள்

Read Entire Article