ARTICLE AD BOX
திருமலை,
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று இரவு 7 மணியில் இருந்து 9 மணிவரை தங்கக் கருட வாகன வீதிஉலா (கருடசேவை) நடைபெறுவது வழக்கம். உற்சவர் மலையப்பசாமி எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
அதன்படி, பவுர்ணமி தினமான நேற்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று இரவு 7 முதல் 9 மணி வரை பவுர்ணமி கருடசேவை நடந்தது. அதையொட்டி உற்சவர் மலையப்பசாமி தங்கக் கருட வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
Related Tags :