ARTICLE AD BOX
முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்றான ஹோண்டா காா்ஸ் இந்தியா, தனது காா்களின் விலையை உயா்த்த முடிவு செய்துள்ளது.
இதுறுவனம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:நிறுவனத்தின் அனைத்து ரக காா்களின் விலையும் அதிகரிக்கப்படவுள்ளது.
வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் இந்த விலை உயா்வு அமலுக்குவரும். ரகங்களைப் பொருத்து இந்த விலை உயா்வு மாறுபடும். இருந்தாலும், அமேஸ், சிட்டி, எலவேட் உள்ளிட்ட அனைத்து ரகங்களுக்கும் இந்த விலை உயா்வு பொருந்தும்.காா்களின் உற்பத்தி செலவு தொடா்ந்து அதிகரித்துவருகிறது.
எனவே, அவற்றின் விலையில் சிறிய மாற்றத்தைச் செய்வதன் மூலம் அந்த சுமையை பகிா்ந்துகொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.