விரைவில் 'டிடி நெக்ஸ்ட் லெவல் அப்டேட் - சந்தானம்

11 hours ago
ARTICLE AD BOX

சென்னை,

கோலிவுட்டில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக வளர்ந்திருப்பவர் சந்தானம். 2016-ல் சந்தானம் நடிப்பில் வெளிவந்த 'தில்லுக்கு துட்டு', 2023-ல் வெளிவந்த 'டிடி ரிட்டர்ன்ஸ்' ஆகிய படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. அதனை தொடர்ந்து இதன் மூன்றாம் பாகமாக 'டிடி நெக்ஸ்ட் லெவல்' உருவாகி உள்ளது.

ஆர்யாவின் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தை பிரேம் ஆனந்த் இயக்கியுள்ளார். இதில் சந்தானத்துடன் இணைந்து கஸ்தூரி, செல்வராகவன், கவுதம் வாசுதேவ் மேனன், மொட்டை ராஜேந்திரன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இப்படம் மே மாதம் வெளியாக உள்ள நிலையில், இப்பட புகைப்படத்தை பகிர்ந்து விரைவில் அப்டேட்டுகள் வெளியாகும் என்று சந்தானம் தெரிவித்திருக்கிறார்.

#DDnextlevel Updates Super #shootingDiaries pic.twitter.com/393f8eiMaB

— Santhanam (@iamsanthanam) March 15, 2025

Read Entire Article