மனிதர்கள் குவித்து வரும் விண்வெளிக் குப்பைகளால் பூமிக்கு காத்திருக்கும் ஆபத்து

5 hours ago
ARTICLE AD BOX

மனிதர்கள் குவித்து வரும் விண்வெளிக் குப்பைகளால் பூமிக்கு காத்திருக்கும் ஆபத்து

காணொளிக் குறிப்பு,
மனிதர்கள் குவித்து வரும் விண்வெளிக் குப்பைகளால் பூமிக்கு காத்திருக்கும் ஆபத்து
2 நிமிடங்களுக்கு முன்னர்

சமீப ஆண்டுகளாக அதிக விண்கலன்கள் மற்றும் செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்படுவதால் உண்டாகும் விண்வெளிக் குப்பைகளால் பூமிக்கு ஏற்படும் அபாயம் குறித்து நிபுணர்கள் பலமுறை எச்சரித்துள்ளனர்.

தகவல் தொடர்பு, தொலைக்காட்சி, வழிசெலுத்தல் மற்றும் வானிலை முன்னறிவிப்புக்கு செயற்கைக்கோள்கள் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன. இதுவரை பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்கள் ஏவப்பட்டுள்ளன. அவற்றின் பல பாகங்கள் தேவையற்றவை என முடிவு செய்யப்பட்டு தனித்து விடப்படுவதால், அவை விண்வெளியில் குப்பைகளாக மிதக்கின்றன.

காலப்போக்கில் செயலிழக்கும் செயற்கைக்கோள்களும் குப்பைகளாக மாறிவிடும். விண்வெளிக் குப்பைகளை அகற்றவும் குறைக்கவும் விண்வெளி வல்லுநர்களும் ஆராய்ச்சியாளர்களும் பல்வேறு வழிகளை ஆராய்ந்து வருகின்றனர்.

பூமியில் நாம் போடும் குப்பை, பூமிக்கு ஆபத்தை விளைவிப்பது போல, விண்வெளிக் குப்பைகளும், வளிமண்டலத்தின் காற்றில் உராய்ந்து இவை சாம்பலாகிவிடும் எனக் கருதினாலும், சில பாகங்கள் முழுதாக எரியாமல் பூமிக்கு ஆபத்தாக மாறிவிடும்.

அதேபோல, விண்வெளிக் குப்பைகள் மணிக்கு 35,000 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிப்பதால், அவை தாக்கும் எந்தவொரு பொருளுக்கும் கணிசமான சேதத்தை ஏற்படுத்தும்.

முழு விவரம் காணொளியில்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

Read Entire Article