ARTICLE AD BOX
விருதுநகரில் தொட்டில் கயிற்றில் ஊஞ்சலாடி விளையாடிய சிறுவன் கழுத்தில் கயிறு இறுகி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், "விருதுநகர் மீசலுாரை சேர்ந்தவர்கள் பாக்கியராஜ்- முத்துலெட்சுமி தம்பதியினர். இதில் பாக்கியராஜ் டிரைவராக உள்ளார். முத்துலெட்சுமி நூறுநாள் வேலைத்திட்ட பணியாளராக வேலைசெய்து வருகிறார்.
இந்த தம்பதியருக்கு வைஷ்ணவ்(வயது 9) எனும் மகன் உள்ளார். வைஷ்ணவ், தாதம்பட்டி அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார். இந்தநிலையில் வைஷ்ணவ், கடந்த ஒரு மாதமாக சரிவர பள்ளிக்குச் செல்லாமல் இருந்துவந்துள்ளார்.
காலையில், பள்ளிச்சீருடை அணிந்து பள்ளிக்குச் செல்வதுபோல் வீட்டிலிருந்து புறப்பட்டு சென்றுவிட்டு, முத்துலெட்சுமி வேலைக்கு சென்றதும், வீட்டிற்கு திரும்ப வந்து டி.வி. பார்ப்பதை வழக்கமாக வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
நரம்பியல் நோயால் வேலையை இழந்த இளைஞர் விபரீத முடிவு - கடிதத்தை படித்த போலீஸார் அதிர்ச்சிஇந்தநிலையில் தாய், தந்தை இருவரும் நேற்று வழக்கம்போல் வேலைக்குச் சென்றுவிட்டனர். இந்தநிலையில், வேலை முடித்து பிற்பகலுக்கு மேல் வீட்டிற்கு வந்த முத்துலெட்சுமி, கதவை திறக்க முற்பட்டுள்ளார்.
அப்போது, வீட்டுக்கதவு உட்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது. பலமுறை தட்டி பார்த்தும் கதவை யாரும் திறக்கவில்லை. இதைத்தொடர்ந்து, அக்கம்பக்கத்தினர் உதவியோடு வீட்டுக்கதவை உடைத்து உள்ளே சென்றபோது, வைஷ்ணவ் வீட்டின் மேற்கூரையில் இரும்பு கொக்கியில் போட்டுவைத்திருந்த தொட்டில் கயிற்றில் கழுத்து இறுகிய நிலையில் உடல் அசைவற்று கிடந்துள்ளான்.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த முத்துலெட்சுமி, வைஷ்ணவை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள், வைஷ்ணவ் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து சிறுவன் இறந்த தகவல் சூலக்கரை போலீஸூக்கு தெரியப்படுத்தப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த போலீஸார், சிறுவன் இறந்தது தொடர்பான புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
போலீஸின் முதற்கட்ட விசாரணையில், 'வீட்டில் தனியாக இருந்த வைஷ்ணவ், தொட்டிலில் விளையாடிக் கொண்டிருக்கும்போது எதிர்பாராதவிதமாக கழுத்தில் கயிறு இறுகி பலியானது தெரியவந்தது" என்றனர்.
இதுதொடர்பாக போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மனைவியை பெட்ரோல் ஊற்றி எரித்து, தற்கொலை நாடகமாடிய கணவன்... விருதுநகர் அருகே நடந்த கொடூரம்