IPL 2025 தொடக்க விழாவில் பங்கேற்கும் கிங் காங் ஷாருக் கான்! இத்தனை பிரபலங்களுக்கு அழைப்பா?

19 hours ago
ARTICLE AD BOX

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரின் 18ஆவது சீசன் இன்று தொடங்குகிறது. இதில், முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ஒரு முறை கூட டிராபி ஜெயிக்காத ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளும் மோதுகின்றன. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

இந்தப் போட்டிக்கு முன்னதாக ஐபிஎல் 2025 தொடரின் தொடக்க விழா பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. இன்று மாலை 6 மணிக்கு தொடங்கும் தொடக்க விழாவில், பின்னணி பாடகி ஷ்ரேயா கோஷல், நடிகை திஷா பதானி மற்றும் பின்னணி பாடகர் கரண் அவுலா ஆகியோர இசை மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கிறது.

ஷாருக்கான்:

இந்த நிகழ்ச்சியின் போது பாலிவுட் கிங் காங் என்று அழைக்கப்படும் ஷாருக்கானும் கலந்து கொள்ள இருக்கிறார். (SRK's IPL Appearance: Mega Star at Today's Ceremony) கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளரான ஷாருக்கான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற இருப்பதாக கூறப்படுகிறது. தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக ஷாருக்கான் தனி விமானத்தில் நேற்று கொல்கத்தா வந்தார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

இதற்கிடையில் கேகேஆர் மற்றும் ஆர்சிபி வீரர்களை சந்தித்த ஷாருக்கான், அவர்களுக்கு தனது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார். இதுவரையில் நடைபெற்ற 17 சீசன்களில் ஷாருக் கானின் கேகேஆர் அணியானது 2012, 2014 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் டிராபி வென்றுள்ளது. கடந்த சீசனில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கேகேஆர் அணிக்கு டிராபி வென்று கொடுத்தது. அதற்கு முன்னதாக கவுதம் காம்பீர் 2 முறை அணிக்கு டிராபி வென்று கொடுத்தார்.

IPL : KKR vs RCB ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டால் என்ன நடக்கும்?

அஜிங்க்யா ரஹானே:

இந்த சீசனில் கேகேஆர் அணிக்கு அஜிங்க்யா ரஹானே கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அவரது தலைமையிலான கேகேஆர் இன்றைய முதல் லீக் போட்டியில் ஆர்சிபி அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியின் போது கொல்கத்தாவில் கன மழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அப்படி போட்டிகள் நடக்கவில்லை என்றால் இரு அணிகளுக்கும் தலா ஒரு ஒரு புள்ளிகள் பகிர்ந்து வழங்கப்படும். 

கேகேஆர் அணி:
 

அஜிங்க்யா ரஹானே (கேப்டன்), வெங்கடேஷ் ஐயர் (துணை கேப்டன்), ரிங்கு சிங், ஆண்ட்ரே ரசல், சுனில் நரைன், வருண் சக்ரவர்த்தி, ஹர்ஷித் ராணா, ரமண்தீப் சிங், அங்க்ரிஷ் ரகுவன்ஷி, குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), ரஹ்மானுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), மயங்க் மார்கண்டே, அன்ரிச் நோர்ட்ஜே, வைபவ் அரோரா, மணீஷ் பாண்டே, லுவ்னித் சிசோடியா (விக்கெட் கீப்பர்), அனுகுல் ராய், ரோவ்மன் பவல், மொயின் அலி, சேத்தன் சகாரியா, ஸ்பென்சர் ஜான்சன்.

ஆர்சிபி அணி

விராட் கோலி, ரஜத் படிதார் (கேப்டன்), ஸ்வஸ்திக் சிகாரா, தேவ்தத் படிக்கல், ஜிதேஷ் சர்மா, பிலிப் சால்ட், மனோஜ் பண்டேஜ், டிம் டேவிட், க்ருனால் பாண்டியா, லியாம் லிவிங்ஸ்டோன், ரோமாரியோ ஷெப்பர்ட், ஜேக்கப் பெத்தேல், ஸ்வப்னில் சிங், புவனேஷ்வர் குமார், ஜோஷ் ஹேசில்வுட், நுவன் துஷாரா, லுங்கி என்கிடி, யாஷ் தயாள், ராசிக் டார் சலாம், சுயாஷ் சர்மா, மோஹித் ராத்தி, அபிநந்தன் சிங்.

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இன்று தொடக்கம்! KKR vs RCB! வெற்றி வாய்ப்பு யாருக்கு அதிகம்?

பிரபலங்களுக்கு அழைப்பு:

மேலும் ஷாருக்கான் தரப்பில் இருந்து இன்றைய போட்டியை பார்வையிட பல பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாம். அந்த வகையில், ரன்பீர் கபூர், ஆல்யா பட், ப்ரியங்கா சோப்ரா, தீபிகா படுகோன், சல்மான் மான், விக்கி கௌஷல், கத்ரினா கைப் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொள்ள வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Read Entire Article