இயற்கையான முறையில் அழகு மருத்துவம்..!! கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க..!!

1 day ago
ARTICLE AD BOX

 

முகம் பளபளப்பாக

கசகசாவை எருமை தயிரில் அரைத்து தினந்தோறும் இரவு படுக்கைக்குச் செல்லும் முன் தடவ முகம் வழுவழுப்பாக மாறும்

காலையில் எழுந்ததும் அவரை இலைச்சாறை முகத்தில் தடவி, 1 மணி நேரம் கழித்து குளித்து வர முகம் பளபளக்கும்.

செம்பருத்தி பூவை நீரில்போட்டு அரை மணி நேரம் கழித்து அந்த நீருடன் பூவையும் அரைத்துச் சாப்பிட்டு வர உடல் நிறம் சிவப்பாகும்.

ஒரு தக்காளியை மிக்ஸியில் அரைத்து குழைத்து எடுத்து கிண்ணத்தில் போட்டு குளிர்சாதன பெட்டியில் ஒரு மணி நேரம் உரைய வைத்து எடுத்துக்கணும். இந்த ஜில் தக்காளியை லேசாக முகத்தில் தேய்த்துத் தடவி, சிறிது நேரத்துக்கு பிறகு முகம் கழுவினால் முகம் பளிச்சென்று இருக்கும்.

சந்தனம் முகத்தில் அடிக்கடி பூசி காயவிட்டு முகம் கழுவ,
முகத்தில் கட்டிகள் வராது.

தலைமுடி கருப்பாக

250 கிராம் மருதாணி பொடியுடன், நெல்லிப் பொடி -100 கிராம், வெந்தயப் பொடி-50 கிராம், முட்டை-1, தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய்-2 தேக்கரண்டி, தயிர்-½ கப், டீ டிகாஷன்-4 தேக்கரண்டி, எலுமிச்சைச்சாறு-8லிருந்து 10 சொட்டுக்கள் சேர்த்து சிறிது தண்ணீரும் கலந்து முதல் நாள் இரவே ஒரு இரும்புப் பாத்திரத்தில் ஊற வைக்க வேண்டும்.

தலை முடியில் லேசாக எண்ணெய் தடவிய பின்னர், கலந்து வைத்த இந்த கலவையை தலை முடியில் முழுவதும் பூசி, ஒரு மணி நேரம் ஊற விடவும்.

முடியில் நிறம் வந்த பின்னர் கழுவலாம் .

முடியில் நிறம் வராவிட்டால் மேலும் அரை மணி நேரம் விட்டு நிறம் வந்த பின்னர் முடியைக் கழுவலாம்.

இப்படிச் செய்து வந்தால் முடி மென்மையாக அழகாக இருக்கும்.

 

Read Entire Article