ஆர்சிபிக்கு தான் கப்பு…விராட் சம்பவம் பண்ணப்போறாரு.. அடித்து சொல்லும் கேன் வில்லியம்சன்!

19 hours ago
ARTICLE AD BOX
kane williamson virat kohli RCB

கொல்கத்தா : இந்த வருடத்திற்கான ஐபிஎல் போட்டி இன்று முதல் தொடங்கப்படவுள்ளது. இன்று நடைபெறும் முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) தங்கள் சொந்த மைதானமான ஈடன் கார்டன்ஸில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியை எதிர்கொள்கிறது. இன்னும் சில மணி நேரங்களில் போட்டி தொடங்கப்படவுள்ள நிலையில், இரண்டு அணியை சேர்ந்த வீரர்கள் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சீசனிலாவது பெங்களூர் அணி கோப்பையை வெல்லுமா என்பது தான் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்பான விஷயமாக இருந்து வருகிறது.

ரசிகர்களை போலவே சில முன்னாள் வீரர்களும் பெங்களூர் அணி இந்த வருடம் கோப்பையை வெல்லவேண்டும் என விரும்பி வருகிறார்கள். அந்த வகையில், முன்னாள் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டபோது பெங்களூர் அணி குறித்து பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” வழக்கமாக எல்லா சீசன்களிலும் பெங்களூர் அணி சிறப்பாக தான் விளையாடி இருக்கிறார்கள். அதைப்போலவே இந்த சீசனிலும் சிறப்பாக விளையாடுவார்கள் என நான் நினைக்கிறேன்.

பெங்களூர் அணியில் கலக்கலாக விளையாடும் விராட் கோலி வழக்கத்தை விட இந்த முறை தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் விளையாடுவார் என நினைக்கிறேன். பல வருடங்கள் கழித்தும் அவர் ஒரே மாதிரி இப்படி அசத்தலாக விளையாடுவதை பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஆச்சரியம் தான் வரும். ஆண்டுகள் கடந்தாலும் அவருடைய பசி என்பது ஒரே மாதிரி இருப்பதால் என்னவோ இப்படி விளையாடுகிறார்.

அதைப்போல, அவருடைய மனதில் முழுவதுமே பெங்களூர் அணி கோப்பையை வெல்லவேண்டும் என்பது தான் இருப்பதாக நினைக்கிறேன். அவரை போல அவருடைய அணியும் அதற்காக இந்த வருடம் தீவிரமாக போராடி எதிரணிக்கு அழுத்தத்தை கொடுப்பார்கள் என நான் நினைக்கிறேன். எனவே, அவர்கள் இந்த முறை கோப்பை வெல்ல அதிக வாய்ப்புகள் இருக்கிறது” எனவும் கேன் வில்லியம்சன் தெரிவித்தார்.

கடைசியாக கடந்த ஆண்டு வில்லியம்சன் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடிய நிலையில், இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிக்கான மெகா ஏலத்தில் யாருமே ஏலத்தில் எடுக்க முன்வரவில்லை என்கிற காரணத்தால் அவர் இந்த ஆண்டு விளையாடவில்லை. விளையாடவில்லை என்றாலும் வர்ணனையாளராக களமிறங்க வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article