சளி மற்றும் இருமலுக்கான பாட்டி வைத்தியம் இதுதான்..!! கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க..!!

1 day ago
ARTICLE AD BOX

சளி மற்றும் இருமலுக்கான பாட்டி வைத்தியம்

மார்கழி பனியால் ஏராளமானோர் இருமல், சளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கீழே சில பாட்டி வைத்திய முறைகள் கொடுக்கப் பட்டுள்ளன. அவற்றை பின்பற்றி பலன் பெறுங்கள்.

ஆரஞ்சு சாற்றில் *அசல்தேன்* மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கலந்து குடித்தால், சளி, இருமல், தொண்டை வலி போன்றவற்றில் இருந்து விடுபடலாம்.கொய்யாப்பழத்தை மிளகுத் தூள் தொட்டு சாப்பிட, நுரையீரலில் உள்ள சளி வெளியேறி, இருமல் பிரச்சனையில் இருந்து தீர்வு கிடைக்கும்.

மாட்டுப் பாலை நன்கு கொதிக்க வைத்து, அதில் *அசல்தேன்* கலந்து குடிப்பதன் மூலமும் சளி, இருமல் தொல்லையில் இருந்து விடுபடலாம்.
வெங்காயத்தை தீயில் சுட்டு சாப்பிடுவதன் மூலம், இருமல் மற்றும் சளியில் இருந்து விடுதலை கிடைக்கும்.

வெற்றிலையை சாறு எடுத்து, *அசல்தேன்* கலந்து குடித்தாலும், இருமலில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.இரவில் படுக்கும் முன் பாலில் மிளகுத் தூள் மற்றும் மஞ்சள் கலந்து குடித்தால், இருமல் வருவதைத் தடுக்கலாம்.கற்பூரவள்ளி இலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்நீரைக் குடிப்பதன் மூலமும் விரைவில் சளித் தொல்லை நீங்கும்.

Read Entire Article