விரல்கள் அழகுடன் விளங்க சில அழகான குறிப்புகளை பார்ப்போம்!

3 hours ago
ARTICLE AD BOX

பெண்களின் கைவிரல்களும் விரல்களில் அமைந்துள்ள நகங்களும் பெண்களுக்கு தனித்த ஒரு எழிலையும் கவர்ச்சியையும் அளிக்கின்றன. ஆகவே பெண்கள் தங்கள் கை கால்களின் நகங்களுக்கும் அழகான தோற்றத்தினை ஏற்படுத்துவதிலும் முக்கியமான கவனம் செலுத்த வேண்டும் பொதுவாக கைவிரல்களை அழகுடன் இருக்குமாறு கவனித்துக் கொள்ள வேண்டும்.

கைவிரல்கள் சதைப் பிடிப்பற்று சீரான உருவத்துடனும் மெல்லியதாகவும் காட்சியளித்தால் தான் பார்க்க அழகாக இருக்கும். கை விரல்களை பயன்படுத்தி வீட்டு வேலைகளை சுறுசுறுப்பாக செய்வது கைவிரல்களுக்காக நல்ல பயிற்சியாகும். அமைதியாக வீட்டில் இருக்கும் நேரங்களில் கைவிரல்களை நீட்டி மடக்கி பயிற்சி செய்யலாம்.

இரவு படுக்கச் செல்வதற்கு முன்பும் அதிகாலையிலும் கைவிரல்களில் ஆலிவ் எண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் தடவிக்கொண்டு இரண்டு கைவிரல்களையும் கோர்த்தும் பினைத்தும் பதினைந்து நிமிஷங்கள் உருவி விட்டுக் கொள்வது கைவிரல் அழகுப்படுத்திக் கொள்வதற்கான எளிய சிறந்த பயிற்சியாகும்.

பாலேட்டையும் கோழி முட்டையின் வெண்கருவையும் கலந்து இரவில் கைவிரல்களில் தடவி வைத்திருந்து காலையில் பச்சை பயிறு மாவு போட்டு தேய்த்து கழுவி விட வேண்டும். இந்த கலவையை முழங்கை வரை கூட தடவலாம். இவ்வாறு தொடர்ந்து தடவி வந்தால் கைகளும் கைவிரல்களும் பொன்னிறமாக எழில் ததும்ப காட்சி அளிக்கும்.

நகங்களை அழகுபடுத்திக் கொள்வதன் மூலம் கைவிரல்களின் அழகு அதிகரிக்கும். நகங்களை அழகு படுத்துவதற்கான முதல் நிலை அவற்றை அடிக்கடி சீராக வெட்டி விடுவது தான் நகங்களை வெட்டுவதற்கு அதற்காக அமைக்கப்பட்டுள்ள நகம் வெட்டும் கருவிகளை தான் பயன்படுத்த வேண்டும்.

நீண்ட விரல்களைப் பெற்ற பெண்கள் கை நகங்களை விரல்களோடு ஒட்டி இருக்கும் இடத்தில் ஒட்ட வெட்டிக்கொள்ள வேண்டும்.

நீண்ட விரல்களை உடைய பெண்கள் தங்கள் நகங்களை அழகுப்படுத்த விரும்பினால் நகங்களின் மையப்பகுதியை உள்வளைவாக இருக்கும் இடத்தில் சந்திர பிம்பம் போல வெட்டிவிட்டு கொள்ளலாம்.

விரல் நகங்களில் பாதாம் எண்ணெயை தளர பூசி அரைமணி நேரம் வைத்திருந்து பிறகு கடலை மாவை கொண்டு நகங்களை சுத்தம் செய்ய வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் நகங்கள் பிரகாசமாக இருக்கும்.

பாலை கொதிக்க வைத்து இறக்கி பொறுக்கும் சூடாக இருக்கும்போது நகங்கள் அதில் படுமாறு நனைத்து, பிறகு சுத்தமான பஞ்சை கொண்டு நகங்களுக்கு அழகையும் பளபளப்பையும் ஊட்டலாம். பலவிதமான வண்ண பாலீஷ் கலவை கடையில் கிடைப்பதை வாங்கி உபயோகிக்கலாம்.

வண்ணக் கலவைகளை நகங்களுக்கு உபயோகிக்கும் போது மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். அதாவது எத்தகைய நகக்கலவைகளை உபயோகப்படுத்தினால் தங்கள் உடல்நிறம், நகத்தின் நிறம், அணியும் உடை ஆகியவற்றுக்கு பொருத்தமாக இருக்கும் என்பதை யோசித்துப் பார்த்துதான் பயன்படுத்த வேண்டும்.

லேசான வண்ண அமைப்புடன் கூடிய நக பாலிஷ்களை எந்த மாதிரி உடல்நலமுடைய பெண்கள் பயன்படுத்தினாலும் அழகாக இருக்கும்.

சற்று வெளுப்பான அல்லது சிவந்த நிறமுடைய பெண்கள் அழுத்தமான வண்ணங்களில் நகங்களில் வண்ணக் கலவைகளை பூசிக்கொள்ளலாம் அது அழகாக இருக்கும்.

கருத்த உடல்நலத்தை பெற்றவர்கள் ஆழ்ந்த வண்ணங்களில் நகங்களில் பூச்சிகளை செய்யக்கூடாது. நகங்களின் இயற்கை வண்ணத்தை பிரதிபலிக்கும் விதத்தில் நகை பாலிஷ் உபயோகித்தால் தான் எடுப்பாகவும் அழகாகவும் இருக்கும்.

ஒவ்வொரு முறையும் நகப்பூச்சு செய்யும் போது முன்னால் பூசப்பட்டிருக்கும் வண்ணக் கலவை கரையை முற்றிலுமாக அகற்றி விட வேண்டும். அப்பொழுதுதான் புதிதாக பூசப்படும் வண்ணக் கலவை அழகாக இருக்கும். பாலிஷ் ரிமூவர் கடைகளில் விற்கப்படுகிறது. அதனை நகங்களில் தடவினால் பழைய நக பூச்சுகள் அகன்று விடும். அதற்குப் பிறகு புதிய நகப் பூச்சினை பூசலாம்.

இதையும் படியுங்கள்:
கை விரல் நகங்கள் அடிக்கடி உடைகிறதா? ஜாக்கிரதை!
beautiful tips for fingers

கோவில் போன்ற புனிதமான இடங்களுக்கு செல்லும்போது நகங்களில் பூச்சு எதுவுமில்லாமல் செல்வது உயர்வான மதிப்பினை தோற்றுவிக்கும். நகப்பூச்சு அவசியம் என்று கருதுபவர்கள் நகங்களின் இயற்கை நிறத்தை பிரதிபலிக்கும் பாலீஷ்களை பயன்படுத்தலாம்.

திருமணம் போன்ற குடும்ப விழாக்களுக்கு செல்லும்போது நகங்களில் அழுத்தமான வண்ணங்களில் நகப்பூச்சுசெய்து கொள்வது விரும்பத்தக்கது.

வெளியில் எங்கும் செல்வதற்கு அவசியம் இல்லாத நிலையில் வீட்டிலேயே இருக்க நேர்ந்தால் நகப்பூச்சை முற்றிலுமாக அகற்றிவிட்டு வெற்று நகங்களுடன் இருப்பது நல்லது.

மருதாணி மூலம் கைகளும் நகங்களும் நிறமூட்ட படும்போது அவை இயற்கையான தோற்றத்துடன் காணப்படும். மருதாணி இலையின் மூலம் நகங்களுக்கு நிறம் மாற்றிக்கொள்ள இலையை வெண்ணெய் போன்று மைய அரைத்து பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் கைவிரல்களும் நகங்களும் நல்ல சிவந்த நிறமாக இருக்கும்.

மருதாணி இலையை அரைக்கும் போது அதனுடன் கத்தை காம்பு மற்றும் களிப்பாக்கையும் சேர்த்து கடுக்காய் ஊறிய நீர் விட்டு அரைத்தால் நல்ல நிறம் கிடைக்கும். மருதாணி இலையை மைய அரைத்து எலுமிச்சம் பழச்சாற்றில் குழப்பி தடவினாலும் நல்ல நிறம் கிடைக்கும்.

சிலருக்கு அடிக்கடி நகம் உடைந்து காணப்படும். குளித்தவுடன் நகத்தில் தேங்காய் எண்ணெய் தடவி வந்தால் உடையாது.

நகங்களில் தேங்காய் எண்ணெயை தடவி விட்டு சிறிது நேரம் கழித்து நகங்களை வெட்டினால் அழகாக வெட்டலாம்.

(பெண்களுக்கான அழகு குறிப்புகள் என்ற நூலில் இருந்து தொகுப்பு)

இதையும் படியுங்கள்:
அழகை கூட்ட வீட்டிலே செலவில்லா விரல் மசாஜ்! செய்வது எப்படி?
beautiful tips for fingers
Read Entire Article