ARTICLE AD BOX
2025 மகளிர் பிரீமியர் லீக் தொடரானது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. கோப்பையை வெல்வதற்கான ரேஸில் டெல்லி கேபிடல்ஸ், குஜராத் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் உபி வாரியர்ஸ் 5 அணிகள் போராடிய நிலையில், டெல்லி கேபிடல்ஸ், குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் மூன்று அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்றன.
இந்நிலையில் எலிமினேட்டர் போட்டியில் குஜராத் அணியை வீழ்த்திய மும்பை இந்தியன்ஸ் அணி இரண்டாவது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்று அசத்தியது.
இன்று நடக்கவிருக்கும் இறுதிப்போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
டெல்லி அணி பந்துவீச்சு..
2025 மகளிர் பிரீமியர் லீக்கின் இறுதிப்போட்டியானது மும்பையில் இருக்கும் பிரபோர்ன் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இந்த இறுதிப்போட்டியில் இரண்டாவது கோப்பையை வெல்ல மும்பை இந்தியன்ஸ் அணியும், முதல் கோப்பையை வெல்ல டெல்லி கேபிடல்ஸ் அணியும் களம்காண்கின்றன.
டெல்லி அணி தொடர்ச்சியாக 3வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. 2 முறையும் இறுதிப்போட்டியில் மும்பை மற்றும் ஆர்சிபி அணிக்கு எதிராக கோப்பையை நழுவவிட்டது.
2023 இறுதிப்போட்டியில் இதே மைதானத்தில் தான் மும்பையிடம் கோப்பை இழந்தது டெல்லி அணி. இந்த சூழலில் 2023 தோல்விக்கு மெக் லானிங் படை பதிலடி கொடுக்க வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பில் டெல்லி ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில் தொடங்கிய போட்டியில் டாஸ் வென்றிருக்கும் டெல்லி கேபிடல்ஸ் மகளிர் அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது.
ஆடும் டெல்லி அணி: மெக் லானிங் (கேப்டன்), ஷஃபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், அனாபெல் சதர்லேண்ட், மரிசான் கேப், ஜெஸ் ஜோனாசென், சாரா பிரைஸ் (கீப்பர்), நிகி பிரசாத், மின்னு மணி, ஷிகா பாண்டே, நல்லபுரெட்டி சரணி
ஆடும் மும்பை அணி: யாஸ்திகா பாட்டியா (கீப்பர்), ஹேலி மேத்யூஸ், நாட் ஸ்கிவர்-பிரண்ட், ஹர்மன்ப்ரீத் கவுர்(கேப்டன்), சஜீவன் சஜானா, அமெலியா கெர், அமன்ஜோத் கவுர், ஜி கமாலினி, சமஸ்கிருதி குப்தா, ஷப்னிம் இஸ்மாயில், சைகா இஷாக்