கணவன் மீதுள்ள பாசத்தில், கள்ளக்காதலனுக்கு இளம்பெண் செய்த கொடூரம்..

6 hours ago
ARTICLE AD BOX

கர்நாடக மாநிலம் சிக்கபனாவரா-நெலமங்கலா ரயில் நிலையங்களுக்கு இடையே, ஆயுதங்களால் தாக்கப்பட்ட அடையாளங்களுடன் இளைஞர் ஒருவரின் சடலம் கிடந்துள்ளது. இதையடுத்து, சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார், இளம்பெண் ஒருவர் உட்பட 3 பேரை கைது செய்தனர். தொடர்ந்து, 6 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

அதன் படி, காணாமல் போனவர்கள் என்று பதிவான வழக்குகளின் விவரங்களை கிருஷ்ணகிரி, ஓசூர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் இருந்து போலீசார் சேகரித்தனர். அதில், சூளகிரியை சேர்ந்த மனோஜ் (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) என்ற வாலிபர் காணாமல் போனது தெரியவந்துள்ளது. மேலும், அந்த வாலிபரின் புகைப்படம், சடலத்துடன் ஒத்து போயிருக்கிறது.

இதனையடுத்து. மனோஜ் காணாமல் போன தினத்தில் அவரது வீட்டின் அருகில் உள்ள கடைகள், பேருந்து நிறுத்தங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது, அவர் இளம்பெண் ஒருவருடன் பேருந்தில் சென்றது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, போலீசார் மனோஜுடன் சென்ற இளம்பெண்ணை விசாரித்தனர். விசாரணையில், பல அதிர்ச்சி தகவல்கள் வெளியானது.

மனோஜை விட 3 வயது மூத்தவரான அந்தப் பெண், மனோஜை காதலித்துள்ளார். இதனையடுத்து, கடந்த சில மாதங்களாக இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். ஆனால், ஒரு கட்டத்தில் அந்த இளம்பெண் மனோஜை விட்டு விலகியுள்ளார். இதனால் மனோஜுக்கு இளம்பெண் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதனால் அவரை மறைமுகமாக கண்காணித்த போது, இளம்பெண்ணுக்கும் அவரைவிட 4 வயது குறைவான இளைஞருக்கும் திருமணம் நடந்திருப்பது தெரிய வந்திருக்கிறது. இதனால் ஆத்திரம் அடைந்த மனோஜ், இளம்பெண்ணுடன் வாக்குவாதம் செய்துள்ளார். இதனால், இதற்கு ஒரு தீர்வு வேண்டும் என்று சொல்லி, மனோஜை இளம்பெண் பெங்களூருக்கு அழைத்து சென்றுள்ளார்.

ஆனால் அங்கு, இளம்பெண்ணின் கணவர் இருந்துள்ளார். இதையடுத்து, இளம்பெண்ணும், அவரது கணவரும் சேர்ந்து மனோஜை கொடூரமாக கொலை செய்துள்ளனர். பின்னர் சடலத்தை, ரயில் தண்டவாளத்தில் வீசியுள்ளனர். இந்த சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read more: “என்ன யாராவது காப்பாத்துங்க” புதரில் இருந்து கேட்ட அலறல் சத்தம்; தெரியாத நபருடன், பைக்கில் சென்ற சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்…

The post கணவன் மீதுள்ள பாசத்தில், கள்ளக்காதலனுக்கு இளம்பெண் செய்த கொடூரம்.. appeared first on 1NEWSNATION - Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News.

Read Entire Article