ARTICLE AD BOX
இன்றைய காலகட்டத்தில் குழந்தையின்மைப் பிரச்சனைக்கு சிகிச்சை பெறும் தம்பதிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. இதற்கான காரணங்கள் என்ன என்றும், இந்த பிரச்சனைகளை எவ்வாறு தீர்ப்பது என்றும் மருத்துவர் ஜெயரூபா தெரிவித்துள்ளார்.
குழந்தை இல்லாத தம்பதிகளில் சுமார் 50 சதவீதம் ஆண்களும் காரணமாக இருப்பதாக மருத்துவர் ஜெயரூபா கூறுகிறார். விந்தணுக்களில் இருக்கும் அசைவு தன்மை மற்றும் எண்ணிக்கை போன்றவை தான் குழந்தை உருவாவதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. இந்த விந்தணுக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஓரிதழ் தாமரையின் மருத்துவ குணங்கள் குறித்து அவர் விவரித்துள்ளார்.
சமீபத்திய நாட்களில் ஆக்சிடேட்டிவ் ஸ்ட்ரெஸ் அதிகரித்து காணப்படுவதாக மருத்துவர் ஜெயரூபா தெரிவித்துள்ளார். இதனால் விந்தணுக்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதாக ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. அதிகமாக செல்போன் பயன்படுத்துவது, உடல் எடை அதிகமாக இருப்பது, சர்க்கரை நோய், புகைப்பழக்கம் மற்றும் மது அருந்துதல் போன்றவை விந்தணுக்களை பாதிக்கிறது.
இதில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கு தினமும் நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும். அன்டி ஆக்சிடென்ட்ஸ் நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை எடுத்துக் கொள்ளலாம். மேலும், விந்தணு குறைபாடு இருப்பவர்கள் ஓரிதழ் தாமரை சூரணம் எடுத்துக் கொள்ளலாம் என மருத்துவர் ஜெயரூபா தெரிவித்துள்ளார்.
இது தாதுவை உண்டாக்கும், தனி மேகத்தை போக்கும் என்று சித்தர்கள் கூறியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த சூரணத்தை காலை நேரத்தில் இரண்டு கிராம் அளவிற்கு பாலுடன் சேர்த்து தினமும் வெறும் வயிற்றில் சாப்பிடலாம். இது விந்தணுக்களின் உள்ளே இருக்கும் டி.என்.ஏ-க்களை பாதுகாக்கும் என்று கூறப்படுகிறது.
தேவைப்படும்பட்சத்தில் ஒரு மருத்துவரை அணுகி அவரது ஆலோசனை பெற்ற பின்னர் இந்த ஓரிதழ் தாமரை சூரணத்தை பயன்படுத்தலாம் என ஜெயரூபா பரிந்துரைக்கிறார்.
நன்றி - SHREEVARMA Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.