தண்ணீர் அளவு தேவை இல்லை... சாதம் வடிக்க 4 நிமிசம் போதும்: இப்படி ட்ரை பண்ணுங்க மக்களே!

9 hours ago
ARTICLE AD BOX

குக்கரில் சோறு செய்யும் பேச்சுலர்களுக்கு இந்த டிப்ஸ் ரொம்ப உதவியாக இருக்கும். எப்படி என்றால், இதற்கு தண்ணீர் அளவே தேவை இல்லை. சாதம் வடிக்க 4 நிமிஷம் போதும், இப்படி ட்ரை பண்ணி பாருங்கள்.

Advertisment

தென் இந்திய மக்களின் பிரதான உணவு அரசிதான். பெரும்பாலும் அரிசியை சமைத்து சோறாக வடித்துதான் சாப்பிடுகிறார்கள். இந்த அரிசியை வேகவைத்து சோறு ஆக்குவது என்பது பெரிய வேலைதான். அதிலும் பேச்சுலர்கள் சோறு வடிப்பதை ஒரு பெரிய வேலையாகவே நினைக்கிறார்கள். பேச்சுலர்கள் பெரும்பாலும் அரிசியை குக்கரில்தான் வேக வைக்கின்றனர். அதிலும் தண்ணீர் அளவு எவ்வளவு வைப்பது என்று தெரியாமல், அளவில்லாமல் தண்ணீர் வைத்துவிட்டு சொதப்பிவிடுவார்கள். 

அதனால், இப்படி குக்கரில் சோறு செய்யும் பேச்சுலர்களுக்கு இந்த டிப்ஸ் ரொம்ப உதவியாக இருக்கும். எப்படி என்றால், இதற்கு தண்ணீர் அளவே தேவை இல்லை. சாதம் வடிக்க 4 நிமிஷம் போதும். இப்படி ட்ரை பண்ணி பாருங்கள். இந்த டிப்ஸ் இனிய பயணம் சங்கீதா என்ற யூடியூப் சேனலில் கூறியுள்ளனர். இப்படி செய்தால் ரொம்ப எளிதாக, விரைவாக சாதம் வடிக்கலாம்.

Advertisment
Advertisement

குக்கரில் 4 நிமிடத்தில் சாதம் வடிப்பது எப்படி என்று தெரிந்துகொள்வோம். உங்கள் விருப்பம் போல அதிகமாக தண்ணீர் வைத்துக்கொள்ளலாம். ரொம்ப எளிதாக சாதம் வடிக்கலாம்.

இதற்கு, முதலில் நீங்கள் எவ்வளவு அரிசி வேக வைக்கப்போகிறீர்களோ அவ்வளவு அரிசியை ஊறவைத்து, கழுவி எடுத்துகொள்ளுங்கள். அதை குக்கரில் போடுங்கள். அதில் தண்ணீரை தாராளமாக ஊற்றுங்கள். குக்கரை மூடி போட்டு மூடுங்கள். ஆனால், விசில் போடக்கூடாது. இப்போது ஸ்டவ்வைப் பற்ற வையுங்கள். விசில் துவாரம் வழியாக ஆவி வரும்போது, குக்கர் விசிலைப் போட்டு மூடிவிடுங்கள். இப்போது, ஸ்டவ்வை ஆஃப் செய்து விடுங்கள். அப்படியே, 4 நிமிடம் விட்டுவிடுங்கள். 4 நிமிடம் கழித்து, குக்கரைத் திறந்து பாருங்கள், அரிசி வெந்து சோறாக மாறியிருக்கும். ஆனாலும், குக்கரில் தண்ணீர் இருக்கும். இப்பொது, குக்கர் மூடியில் உள்ள கேஸ்கட் ரப்பர் வளையத்தை நீக்கிவிட்டு, குக்கர் விசிலையும் எடுத்துவிட்டு மூடுங்கள். அப்படியே, ஒரு பெரிய பாத்திரத்தில் சோறு வடிப்பது போல, குக்கரை சாய்த்து வையுங்கள். அவ்வளவுதான் குக்கரில் இருந்து தண்ணீர் வடிந்துவிடும். 

தண்ணீர் முழுவதுமாக வடிந்தபின் திறந்து பார்த்தால், சோறு பளபளவென வெந்து இருக்கும். இந்த முறையில் குக்கரில் மிகவும் எளிதாக சோறு செய்யலாம். உங்கள் வீட்டில் ட்ரை பண்ணி பாருங்கள். 

Read Entire Article