ARTICLE AD BOX
இசைஞானி இளையராஜாவின் பாடல்களை ரசிக்காதவர்கள் இருக்கவே முடியாது. அனைத்து விதமான உணர்வுகளுக்கும் உயிர் கொடுக்கும் விதமாக அவரது இசை அமைந்திருக்கும். இவரது பாடலுக்கு தமிழகத்தில் மட்டுமல்லாமல் உலக நாடுகள் பலவற்றிலும் ரசிகர்கள் இருக்கின்றனர்.
இசை துறையில் இளையராஜா பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி இருக்கின்றார். அவ்வப்போது அவர் தனது திறமை குறித்து கர்வமாக சில கருத்துக்களை பகிர்ந்து கொள்வார். அவரது திறமைக்கு அவரது கர்வம் தகுதியானது தான் என்று பலரும் பெருமை கொள்வார்கள்.
இந்த நிலையில், இளையராஜா இன்று லண்டனுக்கு சென்று தனது சிம்பொனியை அரங்கேற்றம் செய்ய இருக்கிறார். தற்போது, சென்னை ஏர்போர்ட்டில் அவரை சந்தித்த செய்தியாளர்கள் இளையராஜாவிடம், "இசையமைப்பாளர் தேவா தனது பாடல்களுக்கு காப்புரிமை வேண்டாம். என்று தெரிவித்துள்ளது பற்றி என்ன நினைக்கிறீர்கள்.?" என்று கேள்வி எழுப்பப்பட்டது.
இதையும் படிங்க: #Breaking: பின்னணி பாடகி கல்பனா தற்கொலை முயற்சி.. வீட்டின் கதவை உடைத்து மீட்ட அதிகாரிகள்., மருத்துவமனையில் அனுமதி.!
இந்த கேள்வியை கேட்டதும் இளையராஜா மிகுந்த டென்ஷன் ஆனார். திருப்பி செய்தியாளரிடம், "இப்போ இந்த கேள்வி தேவைதானா.?" என்று கேட்டார்.
இதையும் படிங்க: ரசிகர்களுக்கு குட் நியூஸ்... நடிகை சாய் பல்லவியின் தண்டேல் படத்தின் ஓடிடி ரிலீஸ்.... எப்போது தெரியுமா?