வித்யாசாகர் மகளிர் கல்லூரி ஆண்டு விழா

3 hours ago
ARTICLE AD BOX

செங்கல்பட்டு: செங்கல்பட்டு வித்யாசாகர் மகளிர் கல்லூரியில் நேற்று பகவான் மகாவீர் சுவாமி கலையரங்கில் கல்லூரியின் 20ம் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில், சிறப்பு விருந்தினராக பிரசன்னா வசனாடு (நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி, டிகிடோரோ) கலந்து கொண்டார். பின்னர், அவர் பேசுகையில், ‘பெண்களுக்கு கல்வி மிகவும் அவசியம் என்றும், கற்ற கல்வியின் வாயிலாக மேன்மேலும் தங்களது திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

முதலில் ஒவ்வொருவரும் உங்களை நீங்கள் நேசிக்க கற்றுக் கொள்ள வேண்டும். அப்போதுதான் உங்களது வாழ்வில் வியக்கத்தக்க மாற்றத்தை உணர்வீர்கள். அது உங்களது லட்சியத்தை ஊக்குவிக்கும் என்று மாணவிகளுக்கு எடுத்துரைத்து உரையாற்றினார். பின்னர், கல்லூரியின் ஆண்டு மலரான வித்யாவர்த்தினி சிறப்பு விருந்தினரால் வெளியிடப்பட்டது.

கல்வியாண்டு (2022-2025)ல் சிறந்த மாணவியர்களுக்கான விருது 17 பேருக்கு சிறப்பு விருந்தினர் வழங்கினார். இதனைத் தொடர்ந்து பல்வேறு வகையான கலைநிகழச்சிகள் சிறப்பாக நடைபெற்றன. இவ்விழாவில், வித்யாசாகர் கல்விக் குழுமத்தின் தாளாளர் விகாஸ் சுரானா, பொருளாளர் சுரேஷ் கன்காரியா, கல்லூரி முதல்வர் முனைவர் அருணா தேவி உள்பட கல்லூரி பேராசிரியர்கள், மாணவிகள், பெற்றோர் என பலர் கலந்து கொண்டனர்.

The post வித்யாசாகர் மகளிர் கல்லூரி ஆண்டு விழா appeared first on Dinakaran.

Read Entire Article