ARTICLE AD BOX

விண்வெளிக்கு சென்ற சுனிதா வில்லியம்ஸ் தினசரி அலவன்ஸ் வெறும் $5 தானா; டொனால்ட் டிரம்ப் பதில்
செய்தி முன்னோட்டம்
ஒன்பது மாதங்கள் விண்வெளியில் சிக்கித் தவித்த பிறகு இந்த வாரம் பூமிக்குத் திரும்பிய விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோருக்கான ஓவர்டைம் ஊதியம் குறித்து டொனால்ட் டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.
விண்வெளியில் கூடுதல் நேரம் வேலை பார்த்ததற்கான ஊதியத்தை தனிப்பட்ட முறையில் தன்னுடைய பாக்கெட்டில் இருந்து வழங்குவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உறுதியளித்துள்ளார்.
முன்னதாக, பத்திரிகையாளர் கேள்வியின்போது, விண்வெளியில் அவர்கள் இருவரும் தங்கியிருந்த காலத்திற்கு தினசரி ஊதியமாக $5 என மொத்தம் $1,430 ஓவர்டைம் ஊதியமாக வழங்கப்படுவது குறித்து அவர் ஆச்சரியத்தை வெளிப்படுத்தினார்.
ஊதியம்
சுனிதா வில்லியம்ஸின் வருடாந்திர ஊதியம்
ஓவர்டைம் ஊதியம் குறைவானதாக இருந்தாலும், சுனிதா வில்லியம்ஸிற்கு வருடாந்த ஊதியமாக தோராயமாக $152,258 வழங்கப்படுகிறது.
இது அமெரிக்க கூட்டாட்சி அரசு நிறுவனமான நாசா வழங்குகிறது. மேலும்,நாசாவின் ஊழியர் விதிமுறைகள் அடிப்படையிலேயே அவர்கள் விண்வெளிக்கு சென்றபோது அலவன்ஸ் தொகை ஒவ்வொரு நாளுக்கும் $5 என்ற வீதத்தில் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, அவர்களின் தங்குமிடம் மற்றும் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் அனைத்தும் நாசாவால் பார்த்துக் கொள்ளப்பட்டது.
இதற்கிடையே, செய்தியாளர் சந்திப்பின்போது டொனால்ட் டிரம்ப், ஸ்பேஸ்எக்ஸ் க்ரூ டிராகன் காப்ஸ்யூல் மூலம் அவர்கள் திரும்புவதற்கு வசதி செய்ததற்காக ஸ்பேஸ்எக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க்கையும் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.