ARTICLE AD BOX

மதுரை மாவட்டம், தனக்கன்குளத்தை சேர்ந்தவர் காளீஸ்வரன். இவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், வீட்டிலிருந்து வெளியே வந்த காளீஸ்வரனை, மர்ம நபர்கள் வெட்ட முயன்றனர். இதையடுத்து, அவர் தப்பி ஓடினார். அவரை பின்தொடர்ந்து விரட்டிச் சென்ற மர்மநபர்கள் காளீஸ்வரனை வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பி சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காளீஸ்வரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து காளீஸ்வரனை கொலை செய்தவர்கள் யார்?, எதற்காக கொலை செய்தனர்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர். முன்விரோதம் காரணமாக காளீஸ்வரன் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. காளீஸ்வரன் ஆதரவாளர்கள் மருத்துவமனையில் குவிந்துள்ளதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
The post மதுரை அருகே பயங்கரம்: ஓட, ஓட விரட்டிச் சென்று ரவுடி வெட்டிக் கொலை…! appeared first on Rockfort Times.