விடைபெற்றார் ஜஸ்டின் ட்ரூடோ; கனடாவின் பிரதமராக பதவியேற்றார் மார்க் கார்னி

2 hours ago
ARTICLE AD BOX
கனடாவின் பிரதமராக பதவியேற்றார் மார்க் கார்னி

அமெரிக்காவுடனான பதற்றங்களுக்கு மத்தியில் கனடாவின் புதிய பிரதமராக பதவியேற்றார் மார்க் கார்னி

எழுதியவர் Sekar Chinnappan
Mar 15, 2025
09:16 am

செய்தி முன்னோட்டம்

அமெரிக்காவுடன் அதிகரித்து வரும் பதற்றங்களின் மத்தியில், ​​கனடாவின் 24வது பிரதமராக மார்க் கார்னி வெள்ளிக்கிழமை (மார்ச் 14) அதிகாரப்பூர்வமாக பதவியேற்றார்.

முன்னாள் கனடா வங்கி கவர்னரான மார்க் கார்னி, ஜஸ்டின் ட்ரூடோவிற்கு பதிலாக பதவிக்கு வந்துள்ளார். நிர்வாக அனுபவம் இருந்தாலும், அரசியல் அனுபவம் இல்லாத மார்க் கார்னி, விரைவில் பொதுத் தேர்தலை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமராக பதவியேற்ற மார்க் கார்னி, தனது முதல் கருத்துக்களில், கனடா 51வது மாநிலமாக மாற வேண்டும் என்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் ஆலோசனையை உறுதியாக நிராகரித்தார்.

தாங்கள் ஒருபோதும், எந்த வகையிலும், அமெரிக்காவின் ஒரு பகுதியாக இருக்க மாட்டோம் என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

நடவடிக்கை

மார்க் கார்னியின் முதற்கட்ட நடவடிக்கை

டிரம்பின் வர்த்தகக் கொள்கைகள் மற்றும் இணைப்பு கருத்துக்கள் கனேடிய தேசியவாதத்தில் ஒரு எழுச்சியைத் தூண்டுவதால், அவரது வலுவான நிலைப்பாடு, வரவிருக்கும் தேர்தலில் கார்னியின் ஆளும் லிபரல் கட்சிக்கு பயனளிக்கும் என கட்சியினர் எதிர்பார்க்கின்றனர்.

இதற்கிடையே, கனடா எஃகு மற்றும் அலுமினியம் மீது டிரம்ப் 25 சதவீத வரிகளை விதித்து, மேலும் பொருளாதார நடவடிக்கைகளை அச்சுறுத்திய நிலையில், வர்த்தக பேச்சுவார்த்தைகளில் பரஸ்பர மரியாதை தேவை என்பதை கார்னி வலியுறுத்தினார்.

அமெரிக்காவிற்கு உடனடியாகச் செல்ல அவர் திட்டமிடவில்லை என்றாலும், விரைவில் டிரம்புடன் பேசுவார் என்று தெரிகிறது.

இதற்கிடையில், அவரது முதல் சர்வதேச பயணம் ஐரோப்பாவிற்கு இருக்கும். அங்கு அவர் பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்தின் தலைவர்களுடன் வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு கூட்டாண்மைகள் குறித்து விவாதிப்பார்.

Read Entire Article