ARTICLE AD BOX
பொதுவாக புருவத்தில் உள்ள பொடுகும், தலைமுடியில் உள்ள பொடுகும் ஒன்றேதான். ஒரே மாதிரிதான் இருக்கும். தலைமுடியில் இருக்கும் பொடுகு தலைக்குள் மறைந்துக் கொள்ளும். ஆனால் புருவங்களில் உள்ள பொடுகு சுலபமாக மாட்டிக்கொள்ளும். மஞ்சள் வெள்ளை செல்களைப்போல பருவத்தின் மீது இவை காட்சி அளிக்கும் . வறண்ட சருமம், ஆயிலான சருமம், கெமிக்கல் கிரீம்கள் என பல்வேறு காரணங்களால் புருவத்தின் மீது பொடுகு ஏற்படுகிறது.
இதனை எப்படி நீக்கலாம் என்பதை பார்க்கலாம்.
பருவத்தில் பொடுகு இருப்பதற்குரிய அறிகுறிகள். புருவ அரிப்பு, புருவத்தில் வெள்ளை மஞ்சள் செதில்கள் உதிர்தல், சிவப்பு நிற திட்டு போன்ற அலர்ஜி, சொறி ஏற்படுதல், எரிச்சல் ஊட்டும் சருமம் என பல தொந்தரவுகள் ஏற்படும்.
பொடுகு ஏற்படுவதற்கு அந்த காரணங்கள்;
ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் அதிகப்படியான மன அழுத்தம் இந்த நாள் புருவப் பொடுகுஅதிகரிக்கிறது. என்னுடைய சருமம் அதிகப்படியான வளர்ச்சியை சந்திக்கும்போது சருமம் வறண்டு இருப்பதால் ஒட்டு மொத்த முகமும் பாதிக்கப்பட்டு சிலருக்கு தலைப் பொடுகும், புருவத்திலும் பொடுகு உண்டாகிறது.
பெட்ரோலியம் ஜெல்லி
கண் இமைகள் புருவங்களில் பொடுகு வரும்போது பெட்ரோலியம் ஜெல்லி உதவும். இது சருமத்தை ஈரப்பதம் ஆக்குகிறது.
பெட்ரோலியம் ஜெல்லி சிறிது எடுத்து புருவங்களையும் மயிர் கால்களிலும் தடவி இரவு முழுவதும் விட்டு விட்டு மறுநாள் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவவும் இரவில் இதனைசெய்வதால் பொடுகு நீங்கும் வரை இதை செய்யலாம். நிச்சயம் பலன் கிடைக்கும்.
வெந்நீர் ஒத்தடம் .
கண் இமைகளிலும் பருவங்களிலும் பொடுகு, இருந்தால் எதுவதுப்பான இளம் சூட்டோடு இருக்கும் சுடுநீர் சற்று கனமான துணியை ஊறவைத்து அதை நீரில் நனைத்து அந்த சூட்டோடு கண்கள் மற்றும் புருவத்தின் மீது மேலே வைக்கவும். தொடர்ந்து 15 நிமிடங்கள் வரை வைத்து எடுத்து ஒத்தடம் கொடுத்து வந்தால் சரியாகும்.
உப்பு நீர்
உப்பு நீர் புருவமுடி, கண் இமைகளில் இருக்கும் பொடுகை வெளியேற்ற செய்யும். உப்பு நீர் கண் இமை, புருவங்களில் பொடுகை உண்டாக்கும் பூஞ்சை தொற்று நோயை தடுத்து பொடுகை அதிகரிக்காமல் தடுக்கும். 1 டீஸ்பூன் உப்பை தண்ணீரில் நன்கு கலக்கி கண்களை மூடிக்கொண்டு மெலிதாக புருவங்களில் தடவி மசாஜ் செய்து வெளியேற்ற வேண்டும். 5 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் சுத்தமாக கழுவிவர பொடுகு நீங்கும்.
ஆலிவ் எண்ணெய்.
கண் இமைகளிலும், புருவங்களிலும் உள்ள பொடுகை எதிர்த்து போராட ஆலிவ் எண்ணெய் சிறந்த ஈரப்பத மூட்டும் தன்மை கொண்டது. புருவங்கள சுற்றியுள்ள சருமத்தை ஹைட்ரேட் செய்து பொடுகு வராமல் தடுக்கும். 1 டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய் எடுத்து டபுள் பாயிலிங் மெத்தடில் (சுடு நீரில்) சூடாக்கி லேசாக பொறுக்கும் சூட்டில் புருவங்கள், இமைகளில் கன மான துணியை நனைத்து எடுத்து ஒற்றி எடுக்கவும். 10 நிமிடங்கள் இதனை செய்யலாம். தினமும் செய்து வர பொடுகு நீங்கும்.
டீ ட்ரீ ஆயில்
தேயிலை மர எண்ணெய் என்று சொல்லக்கூடிய டீ ட்ரீ ஆயில் பூஞ்சையால் உண்டாகும் பிரச்னையை போக்கும். இதில் சக்தி வாய்ந்த பூஞ்சை காளான் பண்புகள் உள்ளதால் பொடுகுவருவதை தடுக்கும் ஆற்றல் மிக்கது.
ஒரு டீஸ்பூன் டீ ட்ரீ ஆயில் கிண்ணத்தில் எடுத்து டபுள் பாயிலிங் மெத்தட் முறையில் சூடு செய்து அதை புருவங்கள், கண் இமைகளில் கனமான துணியை நனைத்து லேசான சூட்டில் தடவி வந்தால் பொடுகு நீங்கும். 10 நிமிடங்கள் கழித்து மிதமான நீரில் கழுவவும்.
இதனை தினமும் 3 முறை செய்து வந்தால் பொடுகு அறவே நீங்கும் இதில் உள்ளவற்றில் ஏதேனும் ஒன்றை செய்துவர பொடுகு நீங்கும். பொடுகு நீங்கி அழகான சருமம் பெறலாம்.