விஜய்யை போல நடிகை இடுப்பை கில்லி அரசியல் செய்யவில்லை - அண்ணாமலை!

14 hours ago
ARTICLE AD BOX

நடிக்கும் இடத்திலிருந்து அறிக்கை டைப் செய்யும் உனக்கு (விஜய்க்கு ) என்ன தெரியும் மக்கள் கஷ்டத்தை பற்றி, திரைப்படத்தில் சிகரெட் பிடிக்கிறாய், மது அருந்துகிறாய், இதெல்லாம் செய்துவிட்டு டாஸ்மாக்கை பற்றி பேச விஜய்க்கு யார் உரிமை கொடுத்தார், சிறுபிள்ளை போல பாஜகவிடம் வந்து சண்டை போட வேண்டாம் என அண்ணாமலை பேட்டி அளித்துள்ளார். திமுக அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உட்பட முக்கிய பாஜக பிரமுகர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இந்நிலையில் கைதான பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட சுமார் 110 பேர் மீது நீலாங்கரை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். நேற்று இரவு அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

மேலும் படிக்க - படத்திற்கு வில்லன் தேவைப்படும் போது, அரசியலில் இருக்காதா? - தாடி பாலாஜி!

அண்ணாமலை பேட்டி

தமிழ்நாட்டில் ரேப்பிஸ்டாக இருந்தால் ராஜ மரியாதை, கள்ளச்சாராயம் காய்ச்சிவிட்டால் நமக்கே நஷ்ட ஈடு, மணல் கடத்தினால் ராஜ மரியாதை, ஆனால் ஊழலை தட்டி கேட்டால் உங்களுக்கு சித்திரவதை. இனி பாஜக தரப்பிலிருந்து காவல்துறைக்கு எந்தவிதமான கடிதமும் தரப்போவதில்லை, எந்த ஆர்ப்பாட்டத்திற்கும் பாஜக கடிதம் தராது, இதுவரை ஏழு கடிதம் கொடுத்தோம், ஏழையும் நிராகரித்து விட்டார்கள். அடுத்த ஒரு வாரத்தில் நடக்கக்கூடிய போராட்டம், தமிழகத்தில் உள்ள ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளில் முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் புகைப்படத்தை பிரேம் செய்து மகளிர் அணி ஆணியடித்து ஓட்டுவார்கள்.

ஏப்ரல் முதல் வாரத்தில் பாஜக தலைவர்கள் தொண்டர்கள் அனைவரும் டாஸ்மாக் கடைகளை பூட்டு போட்டு மூட போகிறோம், இரண்டு போராட்டமும் அடுத்து 15 நாட்களில் நடைபெறும். 25 ஆம் தேதி  சென்னையில் ஒரு போராட்டம் நடக்க வாய்ப்பு இருக்கிறது, அதையும் அறிவிக்கப் போவதில்லை. காவல்துறை எங்களை தடுத்து பார்க்கட்டும், தமிழ்நாட்டில் யூனிஃபார்ம் போட்ட போலீசுக்கு தூக்கம் இருக்காது. நமக்கு மரியாதை கொடுக்காத காவல்துறை இன்னையிலிருந்து தூங்கக் கூடாது, விதவிதமான ஆர்ப்பாட்டம் போராட்டம் தமிழ்நாட்டில் நடந்து கொண்டே இருக்கும். அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்த  வழக்கில் தமிழ்நாட்டின் அமைச்சர் ரகுபதி மீது நடைபெற்று வருகிறது. இவர் எங்களிடம் சட்டத்தைப் பற்றி பேசுகிறார்.

என்னைப் பொறுத்தவரை தமிழகத்தில் சட்டத்துறை அமைச்சரே கிரிமினல் தான். அவருக்கு சட்டத்தை பாதுகாப்பதற்கோ, சட்டத்தை போற்றி வணங்குவதற்கோ அவருக்கு எந்தவிதமான அருகதையும் இல்லை. டாஸ்மாக் வழக்கில் எங்களைப் பொறுத்தவரை முதல் குற்றவாளியாக வர வேண்டியவர் தமிழக முதல்வர்தான். டாஸ்மாக்  முறைகேடு விவகாரத்தில் நாடகமாடுவதை விடுத்து மேல் நடவடிக்கை எடுங்கள்  என்று தவெக தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டது தொடர்பான கேள்விக்கு, தமிழக வெற்றி கழகம் பள்ளி மாணவர்களை போல அரசியல் செய்து வருகிறார்கள். நடிகைகளின் இடுப்பை கிள்ளி அரசியல் செய்து கொண்டிருக்கிறார் விஜய்.

நான் விஜய் போன்று நடிகைகளின் இடுப்பை கிள்ளி கொண்டு நடனம் ஆடிக்கொண்டு அறிக்கை கொடுத்துக் கொண்டிருக்கிறேனா? நான் களத்தில் போராடிக் கொண்டு களத்தில் இருந்து பேசிக் கொண்டிருக்கிறேன். விஜய் வொர்க் பிரம் ஹோம் பாலிடிக்ஸ் செய்கிறாரா? விஜய்க்கு அம்பது வயதில்தான் அரசியலுக்கு வர தோன்றியதா? 30 வயதில் எங்கே சென்றார்? விஜய் யாருடைய B டீம்? நாடகம் செய்வது விஜய், நாடகம் செய்வது தவெக. திமுகவின் B டீம் தான் விஜய். ஆணித்தரமாக உறுதியாக சொல்கிறேன், தமிழக வெற்றி கழகத்தின் நடவடிக்கையை பார்த்த பிறகு சொல்கிறேன், திமுக மறுபடியும் ஆட்சிக்கு வர வேண்டும்  என்று ஆரம்பிக்கப்பட்ட சீக்ரெட் ப்ராஜெக்ட் தான் தவெக என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க - 'பட்ஜெட்டும் ஹிட்... தமிழும் ஹிட்...' லோகோவில் 'ரூ' போட்டது ஏன்? ஸ்டாலின் விளக்கம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read Entire Article