ARTICLE AD BOX

சமீபத்தில் அமலாக்கத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தது. அதில் தமிழ்நாட்டில் டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி முறைகேடு நடந்திருப்பதாக தெரிவித்திருந்தது. இதற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்த தடை கோரி தமிழ்நாடு அரசும், டாஸ்மாக் நிறுவனமும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
அதோடு அமலாக்கத்துறையின் இந்த சோதனையை அரசியலமைப்பு சட்டத்தின் கூட்டாட்சி கட்டமைப்புக்கு விரோதமானது என அறிவிக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டு. இந்த மனுக்கள் நீதிபதி எம்.எஸ். ரமேஷ் மற்றும் நீதிபதி என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வரவுள்ளது.