விஜய்யுடன் சுவாரஸ்ய நிகழ்வுகள்: வைரலாகும் பார்த்திபனின் பதிவு!

6 days ago
ARTICLE AD BOX

இயக்குநர் பார்த்திபன் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்யுடன் அரசியல் தொடர்பாக விவாதிப்பது போன்ற கனவுக் கண்டதாக எக்ஸ் தளத்தில் பார்த்திபன் பதிவிட்டுருப்பது வைரலாகி உள்ளது.

இது பற்றி இயக்குநர் பார்த்திபன் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், ”நேற்றிரவு நேற்றைய நண்பரும், இன்றைய தவெக தலைவருமான விஜய் உடனான ஊடலான உரையாடல் , பஜ்ஜியுடன் தேனீர் ருசித்தல், வெளியில் கசியா ரகசிய அரசியல் வியூகம் அமைத்தல் இப்படி விடிய விடிய நீண்ட சுவாரஸ்ய நிகழ்வுகள்.

சரி அதை பதிவு செய்ய ஒரு selfie எடுத்துக்கொள்ளலாமே எனப் பார்த்தால் ….. அது கனவு! ஏந்தான் இப்படியொரு பகல் கனவு இரவில் வருதோ? ஆனா சத்தியமா வந்தது. கனவுகள் நம் நினைவுகளின் நகல்கள் எனச் சொல்வார்கள்.

இதையும் படிக்க: வணங்கான் ஓடிடி வெளியீட்டுத் தேதி!

சமீபமாக என்னிடம் அவர் பற்றிய கேள்விகள் அது சம்மந்தமான மந்தமான என் பதில்கள் …இப்படி சில பல! காரணமாக இருக்கலாம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவு தொடர்பாக ரசிகர் ஒருவர், ”தவெகவில் சேர ஆசை இருந்தால் அதை நீங்கள் நேரடியாக செல்லுங்ககள்…” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு பார்த்திபன், ”இல்லை என்பதால் இதை இடுகிறேன் நண்பா! இருந்தால் கமுக்கமாக இணைந்திருப்பேனே” என்று பதிலளித்தார்.

இயக்குநர் பார்த்திபனின் இப்பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. தவெகவில் இணைவது தொடர்பான அவருடைய ரசிகர்களின் கேள்விக்கு இப்பதிவின் மூலம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் பார்த்திபன்.

Read Entire Article