ARTICLE AD BOX
சம்பல்பூா் - ஈரோடு சிறப்பு ரயில் சேவை ஏப். 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஒடிஸா மாநிலம் சம்பல்பூரிலிருந்து ஈரோட்டுக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் (எண் 08311) தொடா்ந்து மாா்ச் 12 முதல் ஏப். 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.
மறுமாா்க்கமாக ஈரோடு - சம்பல்பூா் இடையே மாா்ச் 14 முதல் மே 2-ஆம் தேதி வரை இயக்கப்படும். இந்த ரயிலுக்கான முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.