ARTICLE AD BOX

தமன்னா ஆடிய ‘காவலா’ ஹாட் ஸாங் போல ‘கூலி’ படத்தில் பாடலொன்று தெறிக்கவிருக்கிறது. இது பற்றிக் காண்போம்..
சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் ‘கூலி’ படத்திற்கு அனிருத் இசையமைக்க, கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவாளராக பணியாற்ற, இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இந்நிலையில், ‘ஜனநாயகன்’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வரும் பூஜா ஹெக்டே ‘கூலி’ படத்தில் ரஜினிகாந்த் உடன் இணைந்து குத்தாட்டம் போட உள்ளார்.
முன்னதாக, ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற ‘காவாலா’ பாடலைப் போல் இப்பாடல் செம ஹிட்டடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தெலுங்கில் பல்வேறு முன்னணி ஹீரோக்களுடன் ஒரு பாடலுக்கு மட்டும் குத்தாட்டம் ஆடியுள்ள பூஜா ஹெக்டே, தமிழில் ‘கூலி’ படத்தில் தான் முதன்முறையாக குத்தாட்டம் போட உள்ளார்.
தற்போது சூர்யாவுக்கு ஜோடியாக ‘ரெட்ரோ’ படத்தில் பூஜா நடித்து முடித்துள்ளார். இப்படம், வருகிற மே 1-ந் தேதி திரைக்கு வருகிறது.
ஒரு பாட்டுக்கு செம சம்பளம் கிடைச்சா யாரு மாட்டேன்னு சொல்வா? பூஜா இல்லன்னா ராஷ்மிகா என நெட்டிசன்ஸ் கமெண்ட்ஸ் தெரிவித்து வருகின்றனர்.

The post விஜய்யின் ‘ஜனநாயகன்’ பட ஹீரோயின் ரஜினியின் ‘கூலி’ படத்தில் குத்தாட்டம்.. appeared first on Kalakkal cinema | Tamil Cinema News | Tamil Cinema Reviews.