விஜய்யின் கடைசி படம்... மாஸ் அப்டேட்.. ரசிகர்கள் குஷி!

3 hours ago
ARTICLE AD BOX

விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் க்ளிம்ஸ் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சினிமா உலகத்திற்கு டாட்டா காட்டியுள்ள விஜய்யின் கடைசி படத்தை எதிர்நோக்கி உலகம் முழுவதும் ரசிகர்கள் காத்து கொண்டிருக்கின்றனர். அரசியலில் குதித்த நடிகர் விஜய் தனது கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என பெயரிட்டுள்ளார். மக்களுக்கு விஜய் மக்கள் இயக்கம் மூலம் தொண்டு செய்து வந்த நடிகர் விஜய், தற்போது கட்சி தொடங்கி மக்களுக்காக களத்தில் குதித்துள்ளார். வரும் 2026ஆம் ஆண்டு மாபெரும் புரட்சியை ஏற்படுத்துமா என்று மக்கள் எதிர்கொண்டு வரும் நிலையில், விஜய் சினிமாவில் இருந்து விடையளித்திருப்பது ரசிகர்களுக்கு பெரும் கவலையாகவே உள்ளது.

டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் விஜய்க்கு தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் ரசிகர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. அப்படி இருக்கையில் இவரின் சினிமா ஓய்வு ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியே. கடைசியாக விஜய் நடிப்பில் வெளியான 'கோட்' படம் பெரும் வரவேற்பை பெற்றது. வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான இந்த படத்திலேயே பல அரசியல் பேசப்பட்டது. இரட்டை வேடத்தில் நடித்த விஜய், தந்தையாகவும், மகனாகவும் அசத்தியிருப்பார். இந்த நிலையில் கடைசியாக நடிக்கும் இவரின் படத்திற்கு தற்காலிகமாக தளபதி 69 என பெயரிடப்பட்டிருந்தது. தொடர்ந்து இந்த படத்திற்கு ஜனநாயகன் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. விஜய் அரசியல் வரும் நேரத்தில் இப்படி ஒரு தலைப்பா என பலரும் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர்.

ஹெச் வினோத் இயக்கத்தில் உருவாகிவரும் இந்தப் படத்தில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, பாபி தியோல் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து வருகின்றனர். படத்திற்கு அனிருத் இசையமைத்து வரும் சூழலில் இந்தப் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அடுத்தடுத்த படங்களால் தன்னுடைய ரசிகர்க கொண்டாட்டத்திற்கு உள்ளாகிவரும் விஜய்யின் இறுதிப்படம் என்பதும் படத்தின் எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது.

இந்த படமானது அரசியல் தொடர்பான கிரைம் திரில்லர் கதைக்களத்தில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Read Entire Article