வீட்டில் சுவையான வெஜ் மோமோஸ் செய்வது எப்படி?

2 hours ago
ARTICLE AD BOX

மோமோஸ், இப்போது மிகவும் பிரபலமான ஒரு தெரு உணவு வகையாக மாறிவிட்டது. குறிப்பாக, குளிர்பிரதேசங்களில் இது மிகவும் விரும்பி சாப்பிடப்படும் ஒரு உணவு. ஆவியில் வேகவைத்து எடுப்பதால், இது ஒரு ஆரோக்கியமான உணவு வகையாகவும் கருதப்படுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய இதை வீட்டிலேயே சுலபமாக, ஆரோக்கியமான முறையில் வெஜ் மோமோஸ் எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:

  • மைதா மாவு - 1 கப்.

  • உப்பு - தேவையான அளவு

  • தண்ணீர் - தேவையான அளவு

  • முட்டைகோஸ் - 1 கப்

  • கேரட் - 1/2 கப்

  • வெங்காயம் - 1/4 கப்                              

  • இஞ்சி - 1 தேக்கரண்டி

  • பூண்டு - 1 தேக்கரண்டி

  • பச்சை மிளகாய் - 1 - 2

  • சோயா சாஸ் - 1 தேக்கரண்டி

  • எண்ணெய் - 1 தேக்கரண்டி

  • உப்பு, மிளகுத்தூள் - தேவையான அளவு

இதையும் படியுங்கள்:
மைதா உணவுகளை எடுத்துக்கொள்வதால் உடலில் ஏற்படும் 5 பிரச்னைகள்!
Momos

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, உப்பு சேர்த்து, கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். மாவு காய்ந்து போகாமல் இருக்க, ஈரத்துணி போட்டு மூடி வைக்கவும். 

உள்ளே வைக்கும் பூரணம் தயாரிக்க, ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். வெங்காயம் வதங்கியதும், முட்டைகோஸ், கேரட் சேர்த்து வதக்கவும். 

காய்கறிகள் அதிகம் வதங்க தேவையில்லை, லேசாக வதக்கினால் போதும். காய்கறிகள் வதங்கியதும், சோயா சாஸ், உப்பு, மிளகுத்தூள் சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும். பூரணம் ஆறியதும் சுவைத்துப் பார்த்து, உப்பு, காரம் தேவைக்கேற்ப சரி செய்து கொள்ளவும்.

இதையும் படியுங்கள்:
காலையில் செய்த இட்லி, மாலையில் காய்ந்து போகுதா? இதைத் தவிர்க்க tips...
Momos

பிசைந்து வைத்த மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி, மெல்லிய வட்டமாக தேய்க்கவும். தேய்த்த வட்டத்தின் நடுவில் பூரணத்தை வைத்து, ஓரங்களை மடித்து மோமோஸ் வடிவத்தில் செய்யவும்.

இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். தட்டில் எண்ணெய் தடவி மோமோஸ்களை அடுக்கி, ஆவியில் 15 - 20 நிமிடங்கள் வேக வைக்கவும். மோமோஸ் வெந்ததும் பளபளப்பாக மாறும். அவ்வளவுதான், சுவையான வெஜ் மோமோஸ் தயார். இதை சூடாக, காரசாரமான சட்னியுடன் சேர்த்து சாப்பிட சூப்பராக இருக்கும். 

Read Entire Article