ARTICLE AD BOX
சென்னை,
16 வயதிலேயே சினிமாவுக்கு வந்து தற்போது பிரபல நடிகையாக உயர்ந்திருப்பவர் தமன்னா. கேடி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான இவர் விஜய், அஜித்குமார், சூர்யா, விக்ரம், தனுஷ் என முன்னணி நடிகர்களோடு நடித்திருக்கிறார்.
முன்னதாக நடிகை தமன்னா மற்றும் பாலிவுட் நடிகர் விஜய் வர்மா இடையே காதல் என பேசப்பட்டது. பின்னர் இதனை தமன்னாவே உறுதி செய்திருந்தார். 'லஸ்ட் ஸ்டோரிஸ் 2 'என்ற வெப் தொடரில் நடித்தபோது இருவருக்கும் காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நடிகை தமன்னா காதலர் விஜய் வர்மாவுடனான உறவை முறித்துக்கொண்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த ஆண்டு விஜய் வர்மா - தமன்னா திருமணம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. தமன்னா விரைவில் திருமண தேதியை அறிவிப்பார் என்று எதிர்பார்த்திருந்த ரசிகர்கள் பிரேக்கப் தகவலால் அதிர்ச்சியடைந்துள்ளனர்.