கோடைகாலம் தொடங்கும் முன்பே.. நாளுக்கு நாள் அதிகரிக்கும் வெயிலின் தாக்கம்

6 hours ago
ARTICLE AD BOX

சென்னை,

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை முடிந்த பிறகு, பனிக்காலம் தொடங்கியது. பனிக்காலத்தில் அதிகாலை நேரங்களில், சாலைகளில் மூடுபனி தென்பட்டது. பொது மக்களுக்கு இதமான சூழலும் நிலவியது.

தற்போது, பனிக்காலமும் ஓய்ந்து, கோடை காலம் தொடங்கி விட்டது. வழக்கமாக கோடை காலத்தில் மார்ச் மாத இறுதியில் இருந்தே கோடை வெயில் உக்கிரமாக இருக்கும். ஆனால், நடப்பாண்டு, கோடை கால தொடக்கத்திலேயே வெயில் சுட்டெரிக்க தொடங்கிவிட்டது. பகல் நேரங்களில், வெயில் தன்னுடைய உக்கிரத்தை வெளிப்படுத்தி வருகிறது.

கோடை கால தொடக்கத்திலேயே வெயிலின் தாக்கம் இப்படி இவ்வாறு இருந்தால், ஏப்ரல், மே மாதங்களில் 'கத்தரி' வெயில் காலத்தில் எப்படி இருக்குமோ? என பொது மக்கள் இப்போதே தவிக்க தொடங்கி விட்டனர். நேற்று மாநிலத்தில் ஒரு சில இடங்களில் கோடை வெயில் சுட்டெரித்துள்ளது.

அதிகபட்சமாக, திருப்பத்தூர் மாவட்டத்தில் 102.58 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. ஈரோட்டில் 101.84 டிகிரி பாரன்ஹீட், கரூர் பரமத்தி மற்றும் சேலம் மாவட்டத்தில் தலா 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது. இ

இந்நிலையில், தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை இயல்பைவிட அதிகம் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதனிடையே நடப்பாண்டு, கோடை காலத்தில் எந்த அளவுக்கு வெயில் சுட்டெரிக்குமோ, அதே அளவுக்கு கோடை மழைக்கும் வாய்ப்பு இருப்பதாக தனியார் வானிலை ஆய்வாளர்கள் கணித்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Read Entire Article