ARTICLE AD BOX
வாஸ்து சாஸ்திரம் நம்முடைய வீட்டில் மங்கலமும், செழிப்பு, செல்வம் நிறைந்ததாக வைக்க உதவுகிறது. எதிர்மறை சக்திகளை நீக்க செய்கிறது. அந்த வகையில் நம்முடைய வீட்டில் சில பொருட்கள் ஒருபோதும் முழுவதுமாகத் தீர்ந்து போக விட வேண்டாம். அப்படிப்பட்ட 4 பொருட்கள் என்னென்ன தெரிந்து கொள்வோம்.
அரிசி
இந்து சமயத்தில் உணவை தெய்வமாகக் கருதுகின்றனர். அதிலும் குறிப்பாக அரிசி மிக முக்கியமான விஷயமாகக் கருதப்படுகிறது. அதன் காரணமாக ஒவ்வொருவரின் வீட்டிலும் அரிசி பாத்திரத்தை ஒருபோதும் காலியாக வைக்கவே கூடாது. அது முழுமையாகக் காலியாவதற்கு முன் அதை நிரப்புவது முக்கியம் என வாஸ்து சாஸ்திரம் குறிப்பிடுகிறது.
அது மட்டுமல்லாமல் வீட்டில் அரிசி, தானியங்கள் தீர விட வேண்டாம். அதனால் வீட்டில் அதிர்ஷ்டம், செல்வ நிலை குறையும் என நம்பப்படுகிறது.
காலியான வாளி
வாஸ்து சாஸ்திரத்தின் படி குளியல் அறையில் ஒருபோதும் வாளியில் நீரை காலியாக்கி வைக்க வேண்டாம். இதனால் வீட்டில் எதிர்மறை சக்திகள் நிரம்பும். அதனால் நீங்கள் குளிப்பது அல்லது துவைத்த பின்னர், அந்த வாளியில் சிறிது நீரைப் பிடித்து வைப்பது நல்லது. இதன் காரணமாக உங்கள் வீட்டில் நிதி நெருக்கடிகள் குறையும் என நம்பப்படுகிறது.
பர்ஸை காலியாக வைக்க வேண்டாம்.
ஒவ்வொரு மனிதனும் செய்ய வேண்டிய முக்கிய விஷயம் சேமிப்பு. அதிலும் குறிப்பாக நீங்கள் வைத்திருக்கக் கூடிய பணப்பையில் குறைந்த பட்சம் ஓரிரு ரூபாய் நோட்டுகளையாவது வைத்திருப்பது நல்லது.
உங்கள் பர்ஸில் உள்ள பணத்தை முழுவதுமாகச் செலவு செய்து விட வேண்டாம். அது மட்டும் இல்லாமல் உங்களுடைய பரிசில் கோவரி, கோமதி சக்கரம் அல்லது சங்கு கூட வைத்திருக்கலாம். இப்படிச் செய்வதன் மூலம் உங்களின் நிதிநிலை சிறப்பான முன்னேற்றம் அடையும்.
தண்ணீர் பானை
உங்கள் வீட்டு பூஜை அறையில், இறைவனுக்காக வைக்கக்கூடிய தண்ணீர் பாத்திரத்தில் ஒருபோதும் தண்ணீர் காலியாக விடுவோ அல்லது, தண்ணீர் இல்லாமல் வைப்பது கூடாது.
நீங்கள் எப்போதெல்லாம் வீட்டில் விளக்கு ஏற்றி வழிபடுகின்றீர்களோ அப்போதெல்லாம், அந்தச் சிறிய தண்ணீர் வைக்கக் கூடிய பாத்திரத்தை விளக்கி மீண்டும் நீரை நிரப்பி வைத்து வழிபாடு செய்யவும்.
அதேபோல உங்கள் வீட்டில் தண்ணீர் பிடித்து வைக்கக்கூடிய குடங்களும் முழுவதுமாக நீர் காலியாகும் வரை விட வேண்டாம். வீட்டில் ஓரிரு குடங்களில் தண்ணீர் எப்போதும் இருக்கும் வகையில் பராமரிப்பது நல்லது.
இல்லையெனில் உங்கள் வீட்டில் நிதி நெருக்கடியைச் சந்திக்க வாய்ப்புள்ளது.